Thursday, November 16, 2017

கிரீன் மசாலா அன்ட் ரெட் மசாலா Whole chicken grill




கேஸில் எண்ணை ஊற்றி சமைப்பதை விட கிரில்லில் செய்வது சுலபம் என்ன முன்னாடியே பிலான் பண்ணனும். ஒரு நாள் முன் மசாலாக்கள் தயார் செய்து ஊறவைக்கவும் சாப்பிட ஒன்னறை மணி நேரம் முன் கிரில்லில் வைக்கனும்.
பேலியோடயட் மற்றும் டயட் செய்பவர்களுக்கு இது அருமையான ரெசிபி.






Whole Grill Chicken Red and green masala
Chicken : Iron Recipes
Preparation time : 1/2 hours + over night marinating time)
cooking time - 1 hour + 10 min
serves : 5







முழு கோழி கிரில்
கிரீன் மசாலா அன்ட் ரெட் மசாலா

முழு கோழி தோலுடன்இரண்டு பெரியது

கிரீன் மசாலா
முழு கோழி - ஒன்று

அரைக்க புதினா அரைகப், பச்சமிளகாய் 2, கொத்துமல்லி தழை - அரைகப் பூண்டு 8 பல், ஒரிகானோ அரை தேக்கரண்டி எல்லாம் சேர்த்த்து அரைக்கவும்.

உப்பு  - ஒரு  தேக்கரண்டி
மிளகு தூள்சிறிது
ஆலிவ் ஆயில்அரை கப்
லெமன் சாறுஒரு மேசைகரண்டி





செய்முறை 

முழு கோழியை நன்றாக கழுவவும் , வினிகர் சேர்த்து கழுவலாம். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்றாக அரைக்கவும்.
முழு கோழி ஒன்றை  நன்றாக கழுவி ஆங்காங்கே கீறி விட்டு மேலே உள்ள மசாலாவை  தடவவும்.


கோழியின் காலுக்கு இடையில்பிரிஞ்சி இலை, காய்ந்த லெமன்  (அ) லெமன் ஸ்லைஸ்அன்னாச்சி பூ , பூண்டு வைக்கவும் இது கிரில் ஆக ஆக வாசனை அருமையாக இருக்கும்.
செய்வதற்கு ஒரு நாள் இரவே ஊறவைக்கவும்.
ஓவனில் கோழி சுட கொடுத்துள்ள  (ரொட்டேடிங்) கம்பியில்  கோழியை சொருகி செட் செய்து 200 டிகிரி முற்சூடு படுத்திய ஓவனில் ஒரு மணி நேரம் பேக் செய்ய வேண்டும்.
இடையில் சிறிது செக் செய்து ஆலிவ் ஆயில் ஸ்ப்ரெட் செய்துகொள்ளலாம்.
கவனிக்க: கடையில் நல்ல பச்சை நிறத்தில் இருக்கும் அது போல வேண்டும் என்றால் சிறிது கிரீன் புட் கலரிங் சேர்த்து கொள்ளலாம்.








ரெட் மசாலா

முழு கோழி ஒன்று
ஆச்சி 65 கபாப் மசாலா – 50 கிராம்
மிளகாய் தூள் – 25 கிராம்
உப்புஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட்ஒரு மேசைகரண்டி
லெமன் சாறுஒரு மேசைகரண்டி













செய்முறை

முழு கோழி ஒன்றை நன்றாக வினிகர் சேர்த்து கழுவும்.மேலே கொடுத்துள்ள மசாலா வகைகளை சேர்த்து நன்கு கோழியில் எல்லா பாகமும் தடவவும்.
கோழியின் காலுக்கு இடையில்பிரிஞ்சி இலை, காய்ந்த லெமன்  (அ) லெமன் ஸ்லைஸ்அன்னாச்சி பூ , பூண்டு வைக்கவும் இது கிரில் ஆக ஆக வாசனை அருமையாக இருக்கும்
ஓவனில் கோழி சுட கொடுத்துள்ள  (ரொட்டேடிங்) கம்பியில்  கோழியை சொருகி செட் செய்து 200 டிகிரி முற்சூடு படுத்திய ஓவனில் ஒரு மணி நேரம் பேக் செய்ய வேண்டும்.
இடையில் சிறிது செக் செய்து ஆலிவ் ஆயில் ஸ்ப்ரெட் செய்துகொள்ளலாம்.
lInking to #livogenironchef the Iron Chef contest on IndiBlogger. 
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா