Wednesday, March 15, 2017

கம்பு பாலக் கீரை பத்திரி/தட்டு ரொட்டி - Bajra Palak Roti


கம்பு பாலக் கீரை பத்திரி/தட்டு ரொட்டி
Bajra palak leaves roti ( paththiri)
kambu roti

நோன்பு காலங்களில் டயபட்டீஸ் உள்ளவர்கள் அதிக காலை நோன்பு வைக்க அல்லது இரவு டிபனுக்கு இதை செய்து சாப்பிடலாம்.


தேவையான பொருட்கள்



கம்பு மாவு ‍ - 200 கிராம்
உப்பு ‍ - தேவைக்கு
கரகரப்பாக திரித்த மிளகு தூள் ‍ - அரை தேக்கரண்டி
பாலக் கீரை (பசலை கீரை) - பொடியாக அரிந்தது ‍அரை கப்
நெய் ‍ ஒரு தேக்கரண்டி
தண்ணீர் ‍ ‍ - கால் கப் + தேவைக்கு
தேங்காய் துருவல் - ‍ முன்று மேசைகரண்டி
பச்ச மிளகாய் ‍ ‍ - ஒன்று பொடியாக அரிந்தது
வெங்காயம் - ஒன்று பொடியாக அரிந்தது









செய்முறை


1.      கம்பு மாவை லேசாக வறுத்து கொள்ளவும்.
2.      கம்பு மாவுடன் மேற்கண்ட அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும்



3.      பிசைந்த மாவை சம  உருண்டைகளாக பிரிக்கவும்.  
4.      ஒரு தட்டில் சதுர வடிவ ஈரதுணியைவிரித்து அதில் ஒரு
 உருண்டையை வைத்து உள்ளங்கை அளவிற்கு உள்ள ரொட்டியாக
தட்டவும்.
5.      நான்ஸ்டி பானை காயவைத்து சிறிதுபட்டர் அல்லது நெய்
 தடவிதட்டிய ரொட்டியை இட்டு இரண்டுபுறமும்நன்கு சிவற வேகவைத்து லேசாகா நெய்தடவி இரக்கவும்.
6.      நெய் வேண்டாமெனில் ஆலிவ் ஆயில்தடவி சுட்டு எடுக்கவும்.
7.      சுவையான கம்பு பாலக் கீரை ரொட்டி ரெடி

.
  டயட் செய்பவர்களுக்கு இது ரொம்பருசியான சத்தான உணவு
கம்பு உடலில் உள்ள எலும்புகளை பலப்படுத்தும்
வயிற்றில் ஏற்படும் புண்ணைஆற்றும்.
இதில் சரியான பதம் வரவில்லை என்றால்அதில் சிறிது ரவை,
சிறிது அரிசி மாவு கலந்துகொள்ளலாம்.
இதற்கு தொட்டு கொள்ள் பக்க உணவு ஏதும்தேவைபடாது
வேண்டுமானால்தக்காளி சட்னி,ஊறுகாய் தொட்டு சாப்பிடலாம்.இல்லை வெங்காய முட்டை சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.



பரிமாறும் அளவு : 3 நபர்களுக்கு







Bajra Palak Roti
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா