Monday, February 23, 2015

வரகரிசி பொங்கல் - Kodo Millet Pongal








வரகரிசி - வரகு அரிசி பொங்கல்- Kodo Millet Pongal


  1. வரகரிசி – 200 கிராம்
  2. பாசி பருப்பு – 75 கிராம்
  3. பெருங்காயம் – 2 சிட்டிக்கை
  4. மஞ்சள் தூள் – ஒரு சிட்டிக்கை
  5. உப்பு - தேவைக்கு
  6. தண்ணீர் – 4 டம்ளர் ( 800 மில்லி)
    நெய் – ஒரு தேக்கரண்டி

தாளிக்க

  1. எண்ணை + நெய் – 2 மேசைகரண்டி
  2. சீரகம்- ஒரு தேக்கரண்டி
  3. மிளகு – ஒரு தேக்கரண்டி
  4. பச்சமிளகாய்- பொடியாக அரிந்தது  அரை தேக்கரண்டி
  5. இஞ்சி – பொடியாக அரிந்தது அரை தேக்கரண்டி
  6. பொடியாக அரிந்த பாதாம் , பிஸ்தா – 2 மேசைகரண்டி




 செய்முறை
  1. பாசிப்பருபை லேசாக வருத்து கொள்ளவும், வரகரிசி பாசிப்பருப்பு இரண்டையும் களைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
  2. குக்கரில், அரிசி பருப்பு, பெருங்காயம், மஞ்சள் தூள், உப்பு, நெய் சேர்த்து 800 மில்லி தண்ணீர் சேர்த்து மூடி போடாமல்  கொதிக்கவிட்டு பிறகு குக்கரை மூடி 3 , 4 விசில் விட்டு இரக்கவும்.
  3. ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து நன்கு கிளறி விட்டு கட்டியில்லாமல் கிளறி வைக்கவும்.
  4. தனியாக சிறிய தாளிக்கும் சட்டியில் மேலே தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து வெந்த பொங்கலுடன் சேர்த்து கலக்கி இரக்கவும்.
  5. சுவையான வரகரிசி பொங்கல் ரெடி.

வரகரிசி - வரகு அரிசி என்பது பழங்கால மக்கள் பயன்படுத்திய ஆரோக்கியமான அரிசிவகை, இந்த ஆரோக்கியமான அரிசி வகைகளான குதிரைவாலி,சாமை, வரகரசி, இப்போது மக்களிடையே மீண்டும் வரவேற்பை பெற்றுள்ளது சந்தோஷமான விடயம்.
இது சென்னையில் நீல்கிரீஸில் கிடைக்கும், வாங்கி செய்து பாருங்கள்.
வரகரிசி பொங்கல்/Kodo millet pongal
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Friday, February 20, 2015

My Fans and Ac's செய்து அனுப்பிய குறிப்புகள்

என்னுடைய Fan's எல்லாம் செய்து அனுப்பிய குறிப்புகளை பார்த்து நான்


இங்கு கணக்கில்லாமல் சமையல் குறிப்புகள் போட்டு கொண்டு இருக்கிறேன், இதை பார்த்து பலர் பயன் அடைகின்றனர்.அதை அவர்கள் செய்து எனக்கு போட்டோ அனுப்பும் போது அதன் சந்தோஷமே தனிதான்..

ஆனால் யாரும் கருத்து தெரிவிப்பதில்லை செய்து பார்த்தார்களா? எப்படி இருந்தது ,உங்கள் வீட்டில் பாராட்டை பெற்றீர்களா? என்பதை நான்  தெரிந்து கொள்ளவது, முடிந்தால் இந்த வலைதளம் பார்த்து செய்து பார்ப்பவர்கள் நீங்க செய்து பார்த்த சமையல் போட்டோவை  என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

என் குறிப்பை  செய்து பார்த்ததில் என் முகநூல் தோழிகள் மற்றும் என் அன்பான அறுசுவை தோழிகள் செய்து பார்த்து எனக்கு அனுப்பி என்னை குளு குளு ஏசியில் குளிரவைத்து விட்டார்கள்.

ஜலீலாவின் அட்டகாசத்தில் இருந்து தோழிகள் செய்து அனுப்பிய ரெசிபி லின்குகள் கிழே கொடுத்துள்ளேன்.

அப்சரா அறுசுவை தோழி - அரபிக் குபூஸ் 

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ....
ஜலீலா அக்கா...
துபாய் ல இருக்கும் போது உங்க குறிப்பை பார்த்து செய்தது குப்பூஸும்,ஹமூஸும்.இப்ப ஞாபகப்படுத்திட்டீங்களா?நஃப்ஸ் விடல அதான் பாலக் வாங்கும் வரை வெய்ட் பண்ண முடியாமல்,இன்னைக்கு வெறும் ஹமூஸ்,குப்பூஸ் செய்துட்டேன் அக்கா...
ஹமூஸ்க்கு கறுப்பு எள் சேர்த்து செய்ததால் கலர் மட்டும் மாறியிருக்கும் மற்றப்படி சூப்பர்...







என் மிட்டாகானாவை செய்து எனக்கு போட்டோவுடன் அனுப்பியதற்கு மிக்க நன்றி ஸாதிகா அக்கா.
கீழை சமையலில் மிகவும் கை தேர்ந்த ஸாதிகா அக்காவும் என் மிட்டாகானாவை சுவைத்து அவர்கள் குடும்பத்தில் அனைவரும் ருசித்து சாப்பிட்டதாக சொன்னதை கேட்டு எனக்கு மிக்க மகிழ்சி.






My Fans and Ac's, Tried and Tasted from Samaiyal attakaasam &cookbookjaleela


முட்டை புளி குழம்பு - ஆயிஷா பஹ்ரைன்





மோர் குழம்பு - கதீஜா - ஜப்பான்









Egg Pepper Dosai
Mufeeda - Fb Group Friend




Bread Halwa - Mumtaj - Fb + Business Friend




Mitta Khana - Shadiqa akkaa - (All in All my Friend)











முகநூல் தோழி ( சின்ன பொண்ணு ( அன்பு தங்கை) ஜாஃப் காதர்) முன்று குறிப்புகளை அட்டகாசமாக செய்து அனுப்பி உள்ளார்கள். மிக்க நன்றி ஜாஃப்



//Thanx ka... sema taste ah irunthuchu.. en paiyanukum rmba pudichiruku..//

Ennai kaththirikkaay - Jaf Khader - Fb Friend





Beetroot Kadalai paruppu kuuttu - Jaf Khader - Fb Friend





 Puri - Ayisha Malaysia - FB Friend

மைதா பூரி சிறப்பு விருந்தினர் பதிவில் மலேசிய குறிப்பை அனுப்பிய ஆயிஷா கீழே உள்ள மைதா பூரியை செய்து அனுப்பி இருக்கிறார்கள்.
ரொம்ப சந்தோஷம் ஆயிஷா.




Baked Fish - Rahila -  Arusuvai Friend

Baked whole fish ராஹிலா அறுசுவை தோழி இதை கிங் பிஷில் செய்து அனுப்பு இருக்காங்கக சுவை மிக அருமையாக இருந்தது, இனி பொரித்து சாப்பிடுவதை விட இப்படி தான் செய்ய போகிறேன் என்றார்கள்.



  https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Saturday, February 14, 2015

ட்ரை கலர் தோசை – டூப்ளிகேட் புல்ஸ் ஐ ஆம்லேட் தோசை - Indian Flag Dosai


ட்ரை கலர் தோசை – ஆம்லேட் தோசை


குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொண்டு சொல்ல இது போல் கலர்ஃபுல்லாக செய்து கொடுத்தால் அம்மாமார்களின் கவலை தீர்ந்தது, உங்கள் வீட்டு பிள்ளைகளின் டிபன் பாக்ஸ் காலி ஆகி ஒன்ஸ்மோர் கேட்பார்கள்.





தேவையான பொருட்கள்
தோசைமாவு தேவைக்கு ( 1 கப் (அ) 2 கப்)

தக்காளி கேரட் சட்னி

வதக்கி அரைகக
எண்ணை – அரை தேக்கரண்டி
கடுகு – கால் தேக்கரண்டி
கருவேப்பிலை பொடி – அரை தேக்கரண்டி

தக்காளி – முன்று
கேரட் – 1
மிளகாய் தூள் – கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் – 2 மேசைகரண்டி
உப்பு – தேவைக்கு
காஞ்ச மிளகாய்  - 2
பூண்டு – 1 பல்

தாளிக்க
எண்ணை – ஒரு தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
கருவேப்பிலை -  சிறிது
உளுந்து  - அரை தேக்கரண்டி
 செய்முறை
தக்காளி பொடியாக அரியவும், கேரட்டை துருவிவைக்கவும்.
வதக்க கொடுத்துள்ளவைகளை வதக்கி ஆரவைக்கவும்.
ஆறியது மிக்சியில் கட்டியாக அரைத்து எடுக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து அரைத்த சட்னி கலவையை சேர்த்து கொதிக்க விட்டு இரக்கவும்,


பாலக் பெஸ்டோ / டிப் . சட்னி

தேவையானவை
பாலக் கீரை – ஒரு கப்
உப்பு – தேவைக்கு
பச்சமிளகாய் – இரண்டு
பூண்டு – 1 பல் பெரியது
வால்நட் – 5
சர்க்கரை – ஒரு பின்ச்

செய்முறை

பாலக் கீரையை கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடிக்கவும்.

வெண்ணீரை கொதிக்கவிட்டு , ஒரு சிட்டிக்கை உப்பு, சர்க்கரை, இட்லி சோடா கால் சிட்டிக்கை சேர்த்து பாலக்கீரையை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இரக்கி வெண்ணீரை வடித்து விட்டு குளிர்ந்த நீரில் கழுவி மீண்டும் தண்ணீரை வடிக்கவும்.
மிக்சியில் வடித்த பாலக், பச்சமிளகாய், தேவைக்கு உப்பு, பூண்டு , வால்நட் சேர்த்து நன்கு அரைக்கவும்.

கிரீன் தோசைக்கான பில்லிங்கும், ரெட் தோசைக்கான பில்லிங்கும் ரெடி

தேவையான அளவு தோசை மாவை முன்று பாகங்களாகா பிரித்து
ஒரு பாக மாவுடன் பாலக் கலவையை கலக்கவும்.
அடுத்த பாக மாவுடன் ஏதும் கலக்க வேண்டாம்.
அடுத்த பாக மாவுடன் தக்களி கேரட் சட்னியைகலந்து வைக்கவும்.

தவ்வாவை சூடு படுத்தி உள்ளங்கை சைஸ் குட்டி குட்டி தோசைகளாக சுட்டு எடுக்கவும்.

குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸ்க்கு தோசை தனியாக சட்னி தனியாக வைத்து அனுப்பாமல் இப்படி அழகாக மாவிலேயே சேர்த்து கலர்ஃபுல்லாக அனுப்பலாம்.


மற்றொரு வகை

கலவையை மாவில் கலக்காமல் முதலில் தோசைமாவை தவ்வாவில் ஊற்றி விட்டு முதலில் வட்ட வடிவமாக ரெட் சட்னியை சுழற்றவும், அடுத்து வெள்ளை மாவை அதை சுற்றிலும் ஊற்றவும்.
அடுத்து பாலக் பெஸ்டோ கலந்த மாவை சுற்றிலும் ஊற்றவும்.




Independence Day Recipe அன்று போஸ்ட் செய் ய செய்து வைத்து பப்லிஷ் பண்ண மறந்துட்டேன்.
இந்த மூவர்ண  தேசிய கொடியில் ரெசிபி செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும். நாட்டு பற்று. என் பள்ளி சீருடை கலரும் இது தான்.


இது என் மகனுக்காக அடிக்கடி இப்படி செய்வது.என் மகன் ஹனீபுதீனுக்கு இன்று பிறந்த நாள் தூஆ செய்து கொள்ளுங்கள்,




https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Tuesday, February 10, 2015

சிறப்பு விருந்தினர் பதிவு -பாசிப்பருப்பு காய்கறி தேங்காய் பால் ஆணம் - பத்ரியா

சிறப்பு விருந்தினர் பதிவு - அரசர்குளம்   ஸ்பெஷல் பாசிபருப்பு ஆணம்.




பாசிப்பருப்பு ஆணம்
இது பத்ரியா Sirajudeen னுடைய குறிப்பு


பத்திரிக்கையாகட்டும், முகநூலாகட்டும், ஒரு டீக்கடை பெஞ்ச் இல்லாமல் இருக்காது, பலடீக்கடைகளில் தம்பி சிராஜ் வைத்து டீக்கடை ஒரு வித்தியாசமானது 
சமையல்,பொது அறிவு, மார்க்க சம்பந்த பட்ட வினாவிடைகள் பல போட்டிகளை நடத்துகிறார்.பல பேர் பரிசுகளும் வாங்கி இருக்கிறார்கள்.
அதில் நபி மொழி ஸஹீஹ் புகாரி ஹதீஸ் தமிழ் குர் ஆன் டாட் காமில் இருந்து  மாதம் இருமுறை வினா விடைகள் கேட்கப்படும். நிறைய போட்டிகளில் கலந்து கொள்ள முடியவில்லை ஆகையால்   கொஞ்சம் இஸ்லாம் மார்க்க அறிவையும் வளர்த்துகொள்ளலாம் என்று இது ஒன்றில் மட்டும் மாதம் இரண்டு முறை கலந்து கொள்கிறேன். 

8 கேள்விகள் கொடுக்கப்படும். ஆனால் 20 நிமிடத்துக்குள் முடிக்கனும். அதில்  ஒரு முறை மட்டும்   எனக்கு ரூபாய் 100 க்கான புத்தகம் பரிசாக கிடைத்தது.

சமையல் போட்டியில் முன்றாம் பரிசும் கிடைத்தது , இதிலும் ரூபாய் 100 க்கான புத்தகம் பரிசாக கிடைத்து.




சிராஜ் நான் ஊரில் இருக்கும் போது குடும்பத்துடன் எங்க சென்னை ப்ளாசா கடைக்கு இரண்டு முறை வந்து புர்கா எடுத்து சென்றார். சிராஜுக்கு ஒரு மகன் , ஒரு மகனார் செம்ம வாலு.
சிராஜ் மனைவி பத்ரியா கடைக்கு வந்த கொஞ்ச நேரம் பழக்கம் தான், அருமையான தங்கை, அவங்க டீக்கடைசமையல் போட்டிக்கு போஸ்ட் பண்ண குறிப்பை தான் நான் இங்கு செய்து பதிந்துள்ளேன்.
அவங்க சொந்த ஊர் அரசர் குளம். பாசிப்பருப்பை அவரவர் ஊர் வழக்கப்படி பல வகைகளில் செய்வார்கள், அதில் இது பத்ரியாவின் ஊரானா அரசர்குளத்து ஸ்பெஷல் பாசிப்பருப்பு ஆணம்.





வடை பஜ்ஜி என்ற வலைதளத்தை எழுதி வரும் சிராஜின் மனைவி பத்ரியாவின் குறிப்பு இது. 
ஆணம் என்றால் குழம்பு/சால்னா. 
பாசிப்பருப்பு ஆணம்.
எல்லாரும் சுலபமாக செய்து பார்க்கலாம்.
பாசிபருப்பு முட்டை ஆணம்
பாசிப்பருப்பு காய்கறி ஆணம்
பாசி பருப்பு தேங்காய் பால் ஆணம்

எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்

நாங்க வெரும் பாசிப்பருப்பு கிச்சிடி, பாசிப்பருப்பில் முட்டையை பொரித்து போட்டு செய்வோம்.ஆனால் இது சற்று வித்தியாசம், இதன் மகிமையே தின் தேங்காய் பாலில் பருப்பை வேகவைத்தது தான் அவ்வளவு ருசி.
அடுத்து அதில் முட்டை சேர்ந்தால் இன்னும் நல்ல இருக்கும்.
இன்னும் தேங்காயை கீறி சேர்த்தால் சாப்பிடும் போது சுவை இன்னும் நல்ல இருக்கும்.


பாசிப்பருப்பு ஆணம்.


தேவையான பொருட்கள் :

1. பாசி பருப்பு - 3 கைப்பிடி அளவு
2. சின்ன வெங்காயம் - 20
3. தக்காளி - 2
4. மஞ்சள் தூள் - ஒரு டீ ஸ்பூன்
5. தேங்காய் பால் - முழு தேங்காயின் திக்கு பால் மற்றும் தண்ணி பால் 2 முறை எடுத்துக்கொள்ளவும்.
6. முருங்கைக்காய் - 1
7. கத்தரிகாய் - 2
8. கேரட் - 2
9. இளம் தேங்காய் - 10 கீறல்கள் ( கிடைத்தால் மட்டும் போடலாம் )
10. முட்டை - ஒரு ஆளுக்கு ஒன்னு வீதம்
11. உப்பு - தேவையான அளவு

தாளிக்க :

12. நெய் - தேவையான அளவு ( எண்ணெயும் பயன்படுத்திக் கொள்ளலாம்)
13. கடுகு மற்றும் உளுந்து - ஒரு டீ ஸ்பூன்
14. கறிவேப்பிலை - தேவையான அளவு
15. காஞ்ச மிளகாய் - 3 
16. சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் - தேவையான அளவு
17. மிளகாய் தூள் - ஒரு டீ ஸ்பூன்


செய்முறை

பாசிபருப்பை லேசாக வறுத்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.

குக்கரில் ஊறவைத்த பாசிப்பருப்பை சேர்த்து தண்ணீயாக எடுத்த தேங்காய் பால் சேர்த்து மஞ்சள் பொடி, வெங்காயம் , தக்காளியை சேர்த்து 3 விசில் விட்டு இரக்கவும்.


வெந்ததும் . அதில் மீதி இருக்கும் தண்ணீ தேங்காய் பால், கேரட், முருங்கக்காய், கத்திரிக்காய் ,உப்பு இளம் கீரல் தேங்காய் சேர்த்து குக்கரை முடிபோடாமல் திறந்தே வைத்து வேக விடவும். மூடி போட்டு ஒரு விசில் விட்டால் கத்திரிக்காய், முருங்கக்காய் உடைந்து விடும்.



காய்கள் வெந்ததும் முட்டைகளை உடைத்து முழுசாக அதில் ஊற்றி கிளறாமல் தீயின் தனலை சிம்மில் வைத்து வேக விடவும். முட்டை வெந்ததும் கடைசியாக திக்கான தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட்டு இரக்கவும்.,
 தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து பருப்புடன்  சேர்த்து கலக்கி இரக்கவும்.


மிக அருமையான ருசியான பாசிபருப்பு காய்கறிதேங்காய் பால் ஆணம் ரெடி.

வெரும் சாதம் ரொட்டி, பூரிக்குஇந்த சைட் டிஷ் அருமையாக இருக்கும்.


Non vegetarian Thali Menu
Plain Rice
Bindi/Okra/Vendaikaay/Ladies Finger  Stir Fry /poriyal
Rasam
Moong Dhal Veg & Coconut Milk Salna
King Fish Fry



கவனிக்க: இது நான் செய்து பார்த்ததில் , நான் ப்ரஷ் தேங்காய் பால் எடுக்கல , தேங்காய் பவுடர் தான் கரைத்து ஊற்றினே, கடைசியாக முட்டையும் ஊற்றவில்லை, , இளம் தேங்காய் கீறியதும் போடவில்லை, இதெல்ல்லாம் போடமலே சட்டி காலியாகிவிட்டது, ஆனால் இதெல்லாம் சேர்த்து இருந்தால் நீங்க திரும்ப திரும்ப நிறைய செய்யவேண்டியதாக இருக்கும்.

நாங்க வெரும் பாசிப்பருப்பு கிச்சிடி, பாசிப்பருப்பில் முட்டையை பொரித்து போட்டு செய்வோம்.ஆனால் இது சற்று வித்தியாசம், இதன் மகிமையே தின் தேங்காய் பாலில் பருப்பை வேகவைத்தது தான் அவ்வளவு ருசி.
அடுத்து அதில் முட்டை சேர்ந்தால் இன்னும் நல்ல இருக்கும்.
இன்னும் தேங்காயை கீறி சேர்த்தால் சாப்பிடும் போது சுவை இன்னும் நல்ல இருக்கும்.

நான் இதில் ஒரு பச்ச மிளகாயை சேர்த்து கொண்டேன். மற்றும் தாளிக்கும் போது இரண்டு பல் பூண்டை பொடியாக நறுக்கி சேர்த்து கொண்டேன்.

மொத்ததில் பதிரியா சிராஜின் குறிப்பு சூப்பரோ சூப்பர்.






https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Sunday, February 8, 2015

How to Clean Prawn Head?இறால் தலையை சுத்தம் செய்வது எப்படி?




இறால் தலையை சுத்தம் செய்வது எப்படி?

How to Clean Prawn Head?

இறால் அழுக்கு எடுப்பது எப்படின்னு போன வீடியோவில் பார்த்தோம் இதில் பெரிய பெரிய இறால் வாங்கி அந்த தலையை தூக்கி தூர போடவேண்டாம் அதிலும்நாம் சுவையாக சமைக்கலாம்.

ஏற்கனவே இறால் தலையில் பஜ்ஜி செய்து இங்கு முன்பே போஸ்ட் பண்ணியுள்ளேன், இதில் கிளீனிங் எப்படி என்று காண்பித்துள்ளேன் பாருங்கள்.
உங்கள் கருத்துக்களை என்னுடன் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975https://www.facebook.com/Samaiyalattakaasamhttp://www.chennaiplazaki.com/

Thursday, February 5, 2015

இறால் அழுக்கு எடுப்பது எப்படி?How to Clean (Remove) Prawn's Vein


















இறால் வறுவல், இறால் பிரியாணி, இறால் மக்ரூணீ, இறால் சேமியா,இறால் உப்புமா, வெங்காய இறால், இறால் தக்காளி கூட்டு, இறால் மஞ்சூரியன் என்ன லைனாக சொல்லும் போதே வாய் ஊறுகிறதா?



சிலபேருக்கு இறால் ரொம்ப பிடிக்கும் ஆனால் எப்படி சுத்தம் செய்வதுன்னு தெரியாது.



இறாலை வாங்கியதும் தலைய கிள்ளிட்டு தோலையும் உரித்து விடலாம், ஆனால் உள்ளே உள்ள அழுக்கை  ( நரம்பை )எப்படிசுத்தம் செய்வதுன்னு நிறைய பேருக்கு தெரியாது.

ஆனால் வெளியில் ஹோட்டல் களில் போனால் அவர்கள் சரியா கிளீன் செய்தார்களா இல்லையான்னு தெரியாது ஆகையால் எனக்கு இறால் சாப்பிட பிடிக்காது..

நம்ம சுத்தம் செய்து அதை செய்து சாப்பிடும் போது மிகவும் திருப்தியாக இருக்கும்

இதில் தலை வாலை கிள்ளியதும் அதில் முதுகிலும் வயிற்றிலும் உள்ள அழுக்கை கத்தியால் கீறி எடுக்கனும்.







http://youtu.be/ODZyd-eH6L4



டிப்ஸ்: இறாலை கழுவும் போது கையில் தண்ணீர் வடிந்து கொண்டே இருப்பதை தவிர்க்க, நியுஸ் பேப்பரை விரித்து அதில் வைத்து கொள்ளுங்கள்

கையில் சாக்ஸை முனையில் வெட்டி விட்டு மணிகட்டில் இருந்து முட்டிவரை போட்டுகொள்ளலாம்.

கையில் உப்பு , எண்ணை தேய்த்து கொண்டால் இறால் ஸ்மெல் கையில் அதிகமாக ஒட்டாது.

ஆய்ந்து முடிந்தது கையில் வாடை வராமல் இருக்க கையில் வினிகர் தேய்த்து கழுவி பிறகு சோப், ஹான்ட் வாஷ் போட்டு தேய்த்து கழுவலாம்.











வீடியோவை பாருங்கள் , உங்கள் கருத்துக்களை எனக்கு தெரியபடுத்துங்கள்.









இறாலில் உள்ள அழுக்கை எடுப்பது எப்படி?
How to Clean Prawn Vein?








https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975https://www.facebook.com/Samaiyalattakaasamhttp://www.chennaiplazaki.com/




https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975https://www.facebook.com/Samaiyalattakaasamhttp://www.chennaiplazaki.com/

Tuesday, February 3, 2015

ப்ளைன் உருளை மந்தி - அரபிக் ப்ளைன் பிரியாணி - Plain Potato Mandi/Arabic Plain Biriyani





பிளைன்ஈஉருளை மந்தி - Plain Potato Mandi


தேவையானவை
அரிசி வேகவைக்க
தரமான பாஸ்மதி அரிசி – 2 டம்ளர்
உப்பு- தேவைக்கு
பச்சமிளகாய் – 2 பெரியது அல்லது 4 சிறியது இரண்டாக கீறியது
சீரகம் – 2 தேக்கரண்டி
எண்ணை – 2 ஸ்பூன்
கிராம்பு - 3
முழு மிளகு – அரை தேக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு

தம் போடுவதற்கு
எண்ணை – இரண்டு மேசைகரண்டி
வெங்காயம் – 2 பெரியது
மஞ்சள் பொடி – கால் தேக்கரண்டி
வட்டவடிவமாக அரிந்த உருளை கிழங்கு – 2
ரெட் கலர் பொடி – ஒரு சிட்டிக்கை

செய்முறை

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விட்டு அதில் கிராம்பு, மிளகு, சீரகம், பச்ச மிளகாய், எண்ணை , உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதி வந்தததும் ஊறவைத்த அரிசியை தட்டி கொதிக்க விட்டு முக்கால் பதத்தில் வடிக்கவும்.


தனியாக வேறு பாத்திரத்தில் எண்ணை விட்டு வெங்காயத்தை சிறிது மஞ்சள் பொடி சேர்த்து வறுத்து வைக்கவும்.



வதக்கிய வெங்காயத்தை தனியாக எடுத்து விட்டு அதே சட்டியில் வட்ட வடிவமாக அரிந்து வைத்துள்ள உருளை கிழங்கை பரவலாக வைத்து சிறிது எண்ணை தெளித்து லேசாக வதக்கி கொள்ளவும் எண்ணையுடன் முக்கால் பதமாக வடித்து வைத்துள்ள சாதததை சேர்க்கவும்.



வறுத்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து லேசாக கிளறி விட்டு, கலர் பொடி தண்ணீரில் கலக்கி தெளித்து 10 நிமிடம் தம் போட்டு இரக்கவும்.

சுவையான ப்ளைன் மந்தி ரெடி,

இதை மட்டன் , சிக்கன் , மீன் , இறால் மந்தியாக தயாரிக்கலாம்.

வடித்த சீரகம் கலந்த கஞ்சி நல்ல மணமாகவும் சுவையாகவும் இருக்கும் இதை சூப் செய்ய பயன்படுத்திக்கலாம்.
எங்கவீட்டில் என் மகனுக்காக மாதம் இரண்டு முறை கப்ஸா, மஜ்பூஸ், மக்லூபா, மந்தி இது போல் ஏதாவது ஒரு டிஷ் பிரியாணி , பகாறாவுக்கு பதில் செய்வேன்.











இது முகநூலில் சைனுதீன் ஈசியாக மந்தி தயாரிக்கும் முறையை போட்டு இருந்தார், நான் அதை சிறிது மாற்றத்துடன் செய்து இருக்கிறேன்,
https://www.facebook.com/photo.php?fbid=882769105076092&set=gm.589783824481847&type=1&theater
நன்றி ஜெய்னுதீன்.

கிழே உள்ளது அவர் குறிப்பு

தேவையான அரிசியை 10 நிமிடம் ஊறவைக்கவும்

-
வடிப்பதற்கு தேவையான தண்ணீரில் உப்பு, ஜீரகம், பச்சமிளகு (பெரியது, இரண்டாக கீறி போடவும்) இரண்டு ஸ்பூன் ஆயில் சேர்த்து கொதிக்க விடவும்.... 

-
கொதிக்கும் தண்ணீரில் ஊறவைத்த அரிசியை சேர்த்து முக்கால் பாகம் வெந்ததும் வடித்து எடுக்கவும்.

-
தம் போடும் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும். பெரிக்கும் போது அரை டீ ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்க்கவும்

-
இந்த கலவையை ஆயிலுடன் வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றிவிட்டு (கொஞ்சம் ஆயில் பாத்திரத்தில் மீதம் இருக்கட்டும்)

-
வடித்து வைத்திருக்கும் ரைஸ்- இந்த பாத்திரத்தில் நிரப்பி அதன் மேல் பெரித்தெடுத்த எண்ணெயிட்ன் இருக்கும் வெங்காய கலவையை மேல்பாகம் தெளித்து ஐந்து நிமிடம் தம் போட்டு இறக்கவும். 

(
இதுவே சுவையானவும் மணமாகவும் இருகும் - இதை மட்டன் மந்தியாக மாற்ற மட்டன் வேகவைத்த தண்ணீர் இருந்தால் அதை ஆயில் கலவை சேர்க்கும் முன் கொஞ்சம் சேர்த்து ஒரு கிளறு கிளரி விட்டு அதன் மேல் கலவையை தெளிக்கவும்.) 

குறிப்பு; இரண்டு கப் அரிசிக்கு ஒரு பெரிய வெங்காயம் 2 டேபிள் ஸ்பூன் ஆயில் போதுமானது.இதில் சில மசலா வகைகளும் , உருளை கிழங்கும் சேர்த்து கொண்டேன்.

Tag:How to Make Arabic Mandi, Arabic Plain Biriayni,Mandi Rice,Potao Mandi,Arabic Biriyani,Cookery Video, வீடியோ சமையல்
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Sunday, February 1, 2015

2015 New Model Shela/Scarf - Februry 1st World Hijab Day

Latest Collection of Shawl - 2015 New Model Shela/Scarf



போட்டியை பற்றி முழு விபரங்கள் அறிந்துக் கொள்ள...

இன்று உலக ஹிஜாப் நாளாம், ஆகையால் எங்க கடைக்காக நான் எடுத்த ஹிஜாப் ( ஷால்) போட்டோக்க்களை இங்கு இந்த பதிவில் விலையுடன் பகிர்ந்துள்ளேன். தேவைபடுபவர்கள் என்னை கிழே உள்ள முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.




நான் ஏனோ தானோன்னு  இப்படி போட்டோ எடுத்து முகநூலிலில் வெப்சைட்டிலும் போஸ்ட் செய்வதை பார்த்து ரொம்ப பிடிச்சி போய் ஒருவர் புதுசா புர்கா + பேன்சி கடை ஓப்பன் செய்து அதுவும் எங்க கிட்டேயே கடைக்கு தேவையான பொருட்கள் அனைத்து வாங்கி நடத்தி கொண்டு வருக்கிறார்.
கேட்டால் நீங்கள் தான் எனக்கு ரோல் மாடல் என்கிறார், 
Shop Name : Starwin Fancy


உங்களை தான் நான் இந்த கடை விஷியத்தில் பாலோ பண்ணுகிறேன் என்றார். ரொம்ப சந்தோஷம். அவர் வியாபாரம் தழைத்தோங்க தூஆ செய்து கொள்ளுங்கள். எங்களுக்கும் துஆ செய்து கொள்ளுங்கள்.

எங்க புர்கா மற்றும் ஷால், ஹிஜாப் வகைகளை இப்போது ஸ்டார்வின் பேன்சி கடையிலும் கிடைக்கும்.
ஸ்டார்வின் பேன்சி 
நம்பர் 87 நல்லதம்பி மெயின் ரோடு
அண்ணா நகர் ,பம்மல் 
சென்னை - 75
தொடர்பு கொள்ளவேண்டிய தொலை பேசி எண் - 00 91 984095215



********************************
Model no : Sh 264 E
2015 Model Scarf /Shawl/Shela - ( Assorted Colours) Model - Sh - 264 E - Price .Rs.250/- + Courier Charges.


2015 Model Scarf /Shawl/Shela - ( Assorted Colours) 
Model - Sh -290 C - Price .Rs.230/- + Courier Charges.



2015 Model Scarf /Shawl/Shela - ( Assorted Colours) 

Model - Sh - 219 B - Price .Rs.230/- + Courier Charges.






2015 Model Scarf /Shawl/Shela - ( Assorted Colours) 

Model - Sh - 280 D - Price .Rs.250/- + Courier Charges.





Black and White Shawl - Shela - Scarf . Rs. 220/- + Courier Charges


Multi Colour Square Shawl

Multi Square Design Shela/Scarf /Shaul

2015 Model Scarf /Shawl/Shela - ( Assorted Colours) Multi Square Design - Price .Rs.220/- + Courier Charges.



Model No. Sh 211 B

Shrink & Printed Shela 






Plain Shaul/Shela /Pashmina/ Big Shela
Rs. 180/- + Courier charges 




Baniyan Cloth Checked Shawl.Scarf - Rs.220/- + Courier Charges.








Model No. RM 18






Model No : 1314




ஹிஜாப்/Hijab
Model Number JM 24
Printed Shela


Model No JM 90 Shining Meterial

 Model No: JM 24

Printed Shela



Plain Shela/Shawl.Shaul  Big Size Cotton Shela
Model No : A1 482

Rs. 250/- Big Shawl


Model Number Ab A 17
Cotton Shela 

AB A 17
Cotton Shela

Model No : 941
Chamki Shela
Rs: 180/-



Model Number : 903 A
Printed Cotton Shela

Rs.180/-


Model  No : A1 478


Chennai Plaza is located in the heart of the Chennai City. We sell all varieties of burkas, shawl, shela, hijab, makkanna,electronics items like rechargeable lights, fans, fancy items like necklace sets, earrings, hair clips, general items like hand bags and purses.

Ladies tailoring facility and xerox facility also available. 
We deal with imported high quality products and offer them at affordable rates. 
We sell all items in  Wholesale and Retail.
Interested parties  may mention their quantities. Price vary according to quantity.
Most of the items are available Ex-Stock.

Chennai Plaza
No, 277/30 Pycrofts Road,1st Floor,(opp:shoba cut piece)
(Near Marina Beach/Express Avenue/Rathna Café)
Triplicane ,
Chennai 600 005
Telephone: + 91 44 45566787
Email Id: chennaiplazaik@gmail.com
feedbackjaleela@gmail.com
Contact persons:
1.       Mobile No. Mr. K.S. Mohideen (Chennai) (0) 91 78 45367954
2.       Mobile No. Mr. S.A. Ibrahim (Chennai) (0) 9843709497
3.       Mobile No. Mr. S.A. Kamaluddin  (Jaleelakamal) (Dubai) (0097150 5453400)  Whatsapp
4.  Mobile No Mr.S.A.Kamaluddin ( Chennai) 91 9840 396140 & Whatsapp
Email Address:  feedbackjaleela@gmail.com


Islamic Clothing for Women




https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/