Tuesday, November 25, 2014

குதிரை வாலி பொங்கல் - Kuthirai Vaali Pongal


குதிரை வாலி பொங்கல்


மறந்து போன பழங்காலத்து சிறுதாணிய வகைகள் மீண்டும் இப்போது அனைவரும் பயன் படுத்த ஆரம்பித்து உள்ளனர்.

ரொம்ப நல்ல விஷியம், அரிசி உணவை தவிர்த்து , குதிரை வாலி, சாமை, வரகரிசி, தினை, கம்பு, கேழ்வரகு  என்று பயன் படுத்தினால் சர்க்கரை வியாதி, கேன்சர் வியாதி, ஹார்ட் பிராப்ளம் போன்ற பல வியாதிகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.

இதில் நான் பயன் படுத்தி இருப்பது குதிரை வள்ளி ( வாலி) Kuthirai vaali என்ற தாணியம், அந்த அளவுக்கு அரிசிக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை மிகவும் நன்றாக இருந்தது.

தேவையான பொருட்கள்.

குதிரை வாலி அரிசி - முக்கால் டம்ளர்
சிறு பருப்பு - கால் டம்ளர்
உப்பு - தேவைக்கு


தாளிக்க

எண்ணை + நெய் - 4 தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பொடியாக அரிந்த பச்சமிளகாய் - ஒரு தேக்கரண்டி
துருவிய இஞ்சி - அரை தேக்கரண்டி
பொடியாக அரிந்து வறுத்த முந்திரி -  ஒரு மேசைகரண்டி
கருவேப்பிலை - 5, 6 இதழ்


செய்முறை

பாசி பருப்பு மற்றும் குதிரை வாலி அரிசியை களைந்து ஊறவைக்கவும்.

குக்கரில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
நன்கு கொதி வந்ததும் ஊறிய அரிசி மற்றும் பருப்பை சேர்த்து உப்பு சேர்த்து வேகவிடவும்.

முக்கால் பதம் வெந்ததும், தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெந்து கொண்டு இருக்கும் அரிசியில் சேர்த்து குக்கரை மூடவும்.
தீயின் தனலை மிதமாக வைக்கவும். முன்று விசில் விட்டு இரக்கவும்.

குக்கர் ஆவி அடங்கியதும், சிறிது நெய் விட்டு கிளறி இரக்கவும்.

இதில் இன்னும் இனிப்பு பொங்கல், அடை, கொழுக்கட்டை, ரொட்டி போன்றவை தயாரிக்கலாம். 

நோன்பு கஞ்சி செய்தவதில் அரிசிகூட இந்த குதிரை வாலியும் பாதிக்கு பாதி சேர்த்து செய்யலாம்.இல்லை கஞ்சியே இந்த தாணியத்தில் செய்யலாம். நான் செய்து பார்த்தேன் மிக அருமையாக இருந்தது.

இதில் கிச்சிடி, முறுக்கு , சத்துமாவு, பாயசம் போன்றவை தயாரிக்கலாம்.

கவனிக்க:  இந்த தாணியவகைகள் கிடைக்கும் இடம் சென்னையில் நீல்கிரீஸ் , ஒரு கிலோ 65 ரூபாய் என்று நினைக்கிறேன்.


ஆயத்த நேரம்: 10 நிமிடம்
சமைக்கும் நேரம் : 10 நிமிடம்
பரிமாறும் அளவு - 2 நபர்களுக்கு

Kuthirai vaali pongal/Breakfast Recipes/



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, November 19, 2014

பனீர் சென்னா புலாவ் ( குக்கர் முறை)

பனீர் சென்னா புலாவ் ( குக்கர் முறை)





குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸ் அல்லது பெரியவர்களுக்கு ஆபிஸ் எடுத்து போக இந்த பனீர் சென்னா புலாவை குக்கரில் எளிதாக செய்து விடலாம்.
குழந்தைகளும் விரும்பிசாப்பிடுவார்கள். லன்ச் பாக்ஸ் க்கு ஏற்ற ஈசி உணவு
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – 300 கிராம்
வேக வைத்த வொயிட் சென்னா ( கொண்டைக்கடலை) – 100 கிராம்
அமுல் பனீர் – 100 கிராம்
அரைக்க
கொத்துமல்லி தழை
புதினா
சின்ன வெங்காயம் – 10 எண்ணிக்கை
பச்ச மிளகாய் – 2
தயிர் – ஒரு மேசைகரண்டி
தாளிக்க
ஆயில் – 3 தேக்கரண்டி
நெய் அல்லது பட்டர் – ஒரு தேக்கரண்டி
பிரிஞ்சி இலை
இஞ்சி பூண்டு விழுது – ஒன்னறை தேக்கரண்டி
கரம் மசாலா – அரை தேக்கரண்டி
சர்க்கரை – 1 சிட்டிக்கை
வெண்ணீர் – 450 மில்லி
உப்பு – சுவைக்கு தேவையான அளவு



FB Id 

 our Shop page Chenani plaza Page


செய்முறை
அரிசியை களைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும். பன்னீரை வெண்ணீரில் கழுவி சிறிது மிளகாய் தூள் , உப்பு தூள் சேர்த்து பிசறி வைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ளவைகளை மிக்சியில் முக்கால் பதத்துக்கு அரைத்து வைக்கவும்.
குக்கரை அடுப்பில் ஏற்றி சூடுபடுத்தி ஒரு தேக்கரண்டி பட்டர் சேர்த்து பனீரை வறுத்து தனியாக ஒரு பவுளில் எடுத்து வைக்கவும்.
அதே குக்கரில் எண்ணைவிட்டு பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.அடுத்து அரைத்து வைத்துள்ளதை சேர்த்து நன்கு வதக்கி இரண்டு நிமிடம் மசாலா ஒரு சேர கிளறி வேகவைத்துள்ள சென்னா, பனீர், கரம் மசாலா, சர்க்கரை , மிளகாய் தூள் நன்கு கிளறி வெண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும்.
ஊற வைத்துள்ள அரிசியை தண்ணீர் வடித்து சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி கொதிக்க விடவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் குக்கரை மூடி தீயின் தனலை குறைவாக வைத்து 2 விசில் விட்டு இரக்கவும்.
ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து சாதம் உடையாமல் கிளறி இரக்கவும்.
லன்ச் பாக்ஸ் க்கு ஏற்ற ஈசி உணவு, நிமிஷத்தில் தயார் படுத்திவிடலாம்.

இதில் மசாலாக்கல் அரைத்து ஊற்றி செய்துள்ளதால் பிள்ளைகளுக்கு எளிதில் சாப்பிடதோதுவாக இருக்கும். பனீர் சென்னா சேர்த்துள்ளதால் இந்த சாதம் மிகவும் சத்துள்ளதாக இருக்கும்.





https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Thursday, November 13, 2014

2014 புது மாடல் புர்காவகைகள்



2014 புதுமாடல் புர்கா வகைகள் கஸ்டமர்கள் கிழே உள்ள படங்களை அனுப்பி கேட்டு கொண்டதால் இந்த டிசைன்களை தைத்து கொடுத்தோம்.
உங்களுக்கும் நீங்கள் விரும்பும் டிசைனில் தேவைப்பட்டால் மாடல்கள் அனுப்பலாம், நாங்கள் தைத்து கொடுக்கிறோம்.







வெளிநாடுகளில் உள்ள தோழிகளும் எங்களிடம் வாங்கி அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப சொல்லு அவர்கள் இந்தியாவரும் போது பெற்று கொண்டனர். 
கீழ்கண்ட தோழிகள் அனைவரும் எங்களிடம் அவர்களுக்கு பிடித்த டிசைனில் வாங்கி அவர்களுக்கு மிகவும் திருப்தியுடன் அணிகிறார்கள்.


அப்சரா - சிங்கப்பூர்

கதீஜா - ஜப்பான்

ராஹிலா - சைனா

நுஸ்ரத் - ஜப்பான்

ரஹ்மத்  - அமெரிக்கா


நஸ் ரீன் - அமெரிக்கா

ஷம்மா -  அமெரிக்கா

முகம்மது ஆயிஷா - பஹ்ரெயின்


மேலும் இங்குள்ள பேச்சுலர்களும் அவரவர் மனைவிமார்கள் நம்பரை என்னிடம் கொடுத்து அவர்களுக்கு பிடித்த டிசைன், சைஸ் எல்லாம் சொல்லு தைத்து கிடைக்கபெற்றுள்ளனர்.



2014 Latest New Model Burka  @ Chennai plaza

Visit More designs 




கீழே உள்ள மாடல்கள் ஹோல்சேல் மற்றும் ரீடெயிலில் தைத்து கொடுப்போம்.தேவை படுபவர்கள் கீழ்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளுஙக்ள். இல்லை என் முகநூலில் மெசேஜ் வைக்கவும்.






அல்லாஹூ அக்பர் கீழே உள்ள புர்கா டிசைனை எந்த டெயிலர் கண்டு பிடிச்சி தச்சாரோ அவர் வாழ்க.



 கிழே உள்ள  கிரீன் ஸ்ட்ரெட்ச் டிசைனும் , முதலில் உள்ள ப்ரவுன் ஸ்ட்ரெட்ச் டிசைனும்.கஸ்டமர்கள் அதிகமாக விரும்பி கேட்கும் புர்கா/ பர்தா.







இன்னும் எங்கள் புர்காக்களை  கீழக்கரை, முத்துபேட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் ,பரமகுடி, கோயம்புத்தூர், நாகர் கோயில், வல்லியூர் ,மேலபாளையம் ,மதுரை, கடலூர், கும்பகோணம், காயல் பட்டிணம் , ,கூத்தாநல்லூர் போன்ற பல ஊர்களுக்கு அவரவர் தேர்ந்தெடுத்த டிசைகளை அனுப்பி வைத்துள்ளோம். 

For Price and other details please send us a message or
call us at +91 445566787 or send an email to

 chennaiplazaik@gmail.com

 or
 feedbackjaleela@gmail.com
or
kamal10182@gmail.com



Kamaluddin Dubai No(whatsapp): 00971 50 5453400
Please Like and visit our - Chennai Plaza FB Page 
                                                   Fb Id: https://www.facebook.com/jaleela.kamal
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Sunday, November 2, 2014

சாஃப்ரான் டீ - குங்குமப்பூ டீ - Saffron Tea


குளீர் காலம் ஆரம்பித்து விட்டது தொண்டைகரகரப்பு, சளி, இருமலும் அழையா விருந்தாளியாக வந்து தூங்க விடாமல் பாடாகபடுத்தும்.
சளி இருமலுக்கு இஞ்சி சாறு தான் பெஸ்ட் இருந்தாலும் குங்குமபூ சேர்த்து தயாரிக்கபடும் சளி இருமலைகட்டு படுத்தும்.




சாப்ரான் டீ

பால் இரண்டு டம்ளர்
தண்ணீர் அரை டம்ளர்
சாஃப்ரான் - அரை தேக்கரண்டி
சர்க்கரை - தேவைக்கு
டீ பவுடர் - ஒன்ன்றை தேக்கரண்டி
தண்ணீர் - அரை டம்ளர்

செய்முறை

பால் இரண்டு  டம்ளர், தண்ணீர் அரை டம்ளர், சாஃப்ரான் (குங்குமப்பூ)  சேர்த்து    நன்கு கொதிக்க விடவும்.சிறிது வற்ற விட்டு இரண்டு டம்ளரில் ஊற்றவும்.

தனியாக அரை டம்ளர் தண்ணீரில் தேயிலை சேர்த்து டிகாஷன் போட்டு நன்கு கொதிக்க விட்டு இரண்டு டம்ளரிலும் பாதி பாதி டிகாஷன் மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கி குடிக்கவும்.






சாஃப்ரான் சளிதொல்லைக்கு மிக அருமையான மருந்து, டீயுடன் அல்லது பாலுடன் சேர்த்து குடிக்கலாம்.

Saffron Tea For Cold, Cough Medicine, 


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/