Tuesday, July 22, 2014

ஹைதராபாதி நிஜாமி பிரியாணி - Hyderabadi Nijami Biriyani




ஹைதராபாத் தம் பிரியாணி என்றாலே அனைவருக்கும் நாவில் நீர் ஊறும் அதிக மசாலா இல்லாத தக்காளி சேர்க்காமல் 40, 45 நிமிடங்கள் வரை தம்மில் குறைந்த தீயில் வேக வைப்பது. பப்பாளிகாய் சேர்ப்பதால் மட்டன் சீக்கிரம் வேகும்.






தேவையான பொருட்கள்

-- மட்டனுடன் ஊறவைக்க‌



மட்டன் எலும்புடன்  ‍ 600 கிராம் 
தயிர் ‍ 200 கிராம்
சிவப்பு மிளகாய் தூள் ‍ 2 தேக்கரண்டி
கரம் மசாலா பவுடர் ‍ 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் ‍ 1/4 தேக்க்ரண்டி
வறுத்த வெங்காயம் ‍ 100 கிராம்(Fried Onion)
இஞ்சி பூண்டு விழுது ‍ 50 கிராம்
முந்திரி ( அரைத்தது) 50 கிராம்
பப்பாளி காய் அரைத்தது ‍ 25 கிராம்
எண்ணை ‍ 4 மேசைகரண்டி




சாதம் வேக வைக்க‌

தண்ணீர் ஓன்னறை லிட்டர்

தரமான பாசுமதி அரிசி ‍ 500 கிராம்
பட்டை , லவஙகம் , ஏலம் ‍ சிறிது
கருப்பு சீரகம் ( ஷாஹீரா)
கொத்துமல்லி தழை ‍ ஒரு கட்டு
புதினா  ‍ஒரு கட்டு

பொடியாக அரிந்த பச்சை மிளகாய்

குங்குமபூ ஒரு பின்ச் 5 மேசைகரண்டி சூடான பாலில் ஊறவைத்தது
எலுமிச்சை சாறு ‍ இரண்டு தேக்கரண்டி

சப்பாத்தி மாவு ‍ 100 கிராம்
அவித்த முட்டை ‍ 2 (4 ஆக கீறியது)




செய்முறை

முதலில் வறுத்த வெங்காயம் தயார் செய்து வைத்து கொள்ளவும்,



வெறும் தவ்வாவில் கொஞ்சமாம எண்ணை விட்டு வெங்காயத்தை வறுத்து வைத்துகொள்ளவும்.
மட்டனை சுத்தம் செய்து வைக்கவும்.



ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மட்டன், தயிர், மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், உப்பு, கரம்மசலா, வறுத்த வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, அரைத்த பப்பாளி விழுது, அரைத்த முந்திரி விழுது எல்லாவற்றையும் சேர்த்து 3 மணி நேரம் ஊறவைக்கவும்.



ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவிட்டு அதில் எண்ணை + உப்பு சேர்த்து , அரிசியை களைந்து சேர்த்து பட்டை லவங்கம் ஏலம், ஷாஜீரா, சிறிது கொத்து மல்லி புதினா சேர்த்து அரை வேக்காடாக வடித்து வைக்கவும்.வடித்த சாதத்தை முன்று பாகங்களாக பிரிககவும்


.
ஊறவைத்த மட்டனை இரண்டு அல்லது முன்று பாகமாக பிரித்து வைக்கவும்

அடிகனமான பாத்திரத்தில்  முதலில் ஊறவைத்த  மட்டன்  கலவை, அடுத்து முக்கால் பாகம் வேகவைத்த அரிசி , அடுத்து வறுத்த வெங்காயம் அடுத்து கொத்துமல்லி, புதினா தழை போட்டு சமப்படுத்தவும்.

(இதே போல் மீதி உள்ள அரிசி மற்றும் மட்டன், மற்ற பொருட்களையும் அதே போல் லேயராக வைத்து சமப்படுத்தவும்). ( நான் இதில் இரண்டு லேயர்கள் மட்டும் போட்டுள்ளேன்.

மேலும் அடுத்த  பகுதி அரிசியை சேர்த்து சமப்படுத்தி அதன் மேல் கொஞ்சம் ஊறவைத்த மட்டனை வைக்கவும், அதன் மேல் சிறிது சாப்ரான் பால், கொத்துமல்லி புதினா தழை, அரிந்த பச்சை மிளகாய், வறுத்த வெங்காயம் அனைத்தையும் தூவவும்..





சப்பாத்தி மாவை கயிறு போல் திரித்து பாத்திரத்தின்  விளிம்பின் வாய் பகுதியில் சுற்றிலும்  ஒட்டவும். பாத்திரத்தை மூடி 30 நிமிடம் சிறு தீயில் தம் போடவும்.




அரை மணி நேரம் தம்மில் விடவும். பிறகு தம் போடும் கருவியை கேஸ் அடுப்பின் மேல் சட்டிக்கு கீழ் வைத்து சிம்மில் 20 நிமிடம் வைக்கவும்.

சப்பாத்தி மாவு இல்லாமலும் தம் போடலாம். பிரியாணி சட்டி நன்கு இறுகலாக முடி இருக்கனும் அவ்வளவுதான்.

தம் போடுவதை  முன்று முறைகளாக செய்யலாம்.

1. அடிகணமான தவ்வாவை அடுப்பின் மேல் வைத்து பிரியாணி சட்டியை ஏற்றி கணமான ஈரடவலை வைத்துமேலே மூடி போட்டு சூடானா கஞ்சி அல்லது, நெருப்பு கங்குகள் வைத்து தம் போடலாம்.

2. அடிகணமான தவ்வாவை அடுப்பின் மேல் வைத்து பிரியாணி சட்டியை ஏற்றி பாயில் பேப்பரை போட்டு மூடி போட்டு அதன்மேல் சூடானா கஞ்சி வைத்து தம் போடலாம்.

3. அடிகணமான தவ்வாவை அடுப்பின் மேல் வைத்து பிரியாணி சட்டியை ஏற்றி மூடி போட்டு மூடிக்கு பேப்பர் கிளிப் கள் பொருத்தி அதன் மேல் வடித்த சூடான கஞ்சியை ஏற்றி தம் போடலாம்.





சும்மா சும்மா இடையில் திறந்து கிளற கூடாது.
தம் போட்டு முடிந்ததும் எடுத்து லேசாக கிளறி விட்டு பரிமாறும் தட்டில் வைத்து சிறிது வறுத்த வெங்காயம், அவித்த முட்டை , கொத்துமல்லி தழை அல்லது புதினா தழை வைத்து அலங்கரித்து பரிமாறவும்.
சுவையான ஹைதராபாதி நிஜாமி பிரியாணி ரெடி.






மற்றொரு வகை ஹைதராபாத் பிரியாணியை இங்கு சென்று காணலாம்.

மிக சுலபமாக செய்யகூடிய பிரியாணி. மட்டன் ஊறவைக்கனும், சோறு வடித்து தட்டனும் ,தம் போடனும் , அவ்வளவு தான் கொஞ்சம் நிதானம் + பக்குவம் வேண்டும், இதில் தக்காளி சேர்க்க தேவையில்லை. சுவையான தம் பிரியாணி ரெடி.
என் மகனுக்காக செய்தது.

இப்தார் மெனு
ஹைதராபாதி நிஜாமி பிரியாணி 
பூந்தி ரெய்தா
சிக்கன் டிக்கா போன்லெஸ்
அகர் அகர் , கடல் பாசி

Hyderabad Chicken Biriyani 

அரபிக் பாரம்பரிய இனிப்பு வகை பஸ்பூசா/ Basbausa  இங்கு சென்று பார்க்கவும்



Samaiyail attakaasam facebook page

ஊருக்கு போகிறேன், பிறகு சந்திப்போம். இங்கு ஒரு நாளைக்கு 1300 பேர் என் தளத்தை பார்வையிடுகிறீர்கள்,. இங்கு கமென்ட் பண்ண சோம்பல் படுபவர்கள்
என் முக நூல் பேஜில் கருத்து தெரிவிக்கலாமே? என் குறீப்பு மூலம் பயனடைந்தவர்கள் எனக்கு மெயில் செய்தமைக்கு மிக்க நன்றி + சந்தோஷம்


அப்படியே சென்னை ப்ளாசா இங்கு புது மாடல் , ஷால் கள் நிறைய இருக்கு தேவைபடுபவர்கள் அதில் கொடுத்துள்ள நம்பர்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இது வரை கேட்ட வர்களுக்கு எல்லாம் அவரவர் விருப்பப்ப்படி அனுப்பி வைத்துள்ளேன் எல்லாருக்கும் மிக திருப்தி,. அது போல் இதைபார்வையிடுபவர்கள் மற்றும் உங்கள் சொந்தங்களுக்கு எங்க கடையை அறிமுகப்படுத்தி வையுங்கள்

சென்னை ப்ளாசா முக நூல் பேஜ் , லைக் செய்து ஷேர் பண்ணுங்கள்


என் தளத்தில் உள்ள குறிப்புகளை என் அனுமதி இல்லாமல் வேறு எந்த தளத்துக்கு அனுப்பாதீர்கள் வேண்டுமானல் என் லிங்க் மற்றும் பெயருடன் ஷேர் பண்ணுங்கள்..




சென்னை ப்ளாசா வெப்சைட் - 1

சென்னை ப்ளாசா வெப்சைட் - 2



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Thursday, July 17, 2014

Latest Collection of New Model Abaya/ Burka//பர்தா

Arabic Type V Neck Gold Lace Gold Stone





New Model Burka/ Abaya//பர்தா/@ Chennai Plaza

Chennai Plaza 

Latest New Model Burka

Gold Stretch & Net + Stone



Black and White Velvet




Green Lace  Stone


Grey & Black

Saree Model Abaya

Stretch  Net
 Black & White Velvet Burka











For Price and other details please send us a message or

call us at +91 445566787/ 971 50 5453400  or send an 


email to


 chennaiplazaik@gmail.com


 or

 feedbackjaleela@gmail.com

Please Like and visit our - Chennai Plaza FB Page 

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/





Thursday, July 10, 2014

சைவ நோன்பு கஞ்சி /Veg Nonbu Kanji/Soup



 இஸ்லாமிய இல்லங்களில் நோன்பு காலங்களில் செய்யபடும் கஞ்சியின் ருசியே தனி தான், அதை விதவிதமாக செய்யலாம். சிக்கன் , மட்டன் , பீஃப், காய்கறி கஞ்சி என்று. எல்லாருக்குமே இதை சுவைத்து பார்க்கனும் என்று ஆசை தான். இனி அசைவம் சாப்பிடாதவர்களும் சுவைத்து மகிழலாம். இதற்கு சூப்பர் காம்பினேஷன் பருப்பு வடை தான் , இங்கு உள்ள பருப்பு வடை கடலை பருப்பை மிஷினில் கொடுத்து ஒன்றும் பாதியுமாய் உடைத்து வாங்கி செய்தது,

ரமலான் ஸ்பெஷல் சைவ நோன்பு கஞ்சி


ஏற்கனவே இங்கு டயட் நோன்பு கஞ்சி போஸ்ட்செய்துள்ள்ளேன். அங்கு வல்லியம்மா சைவ நோன்பு கஞ்சி எனக்கு ரொம்ப ஆசை என்றார்கள் இது அவர்களுக்காக இங்கு சைவ நோன்பு கஞ்சி
 ஏற்கனவே போட்டுள்ள டயட் நோன்பு கஞ்சியில் கூட சிக்கன் மட்டனுக்கு பதில் வேண்டிய காய்கறிகள் சேர்த்து சைவ பிரியர்கள் இப்படி தயாரித்து கொள்ளலாம்.



 கஞ்சி செய்ய தேவையான  அரிசி வகைகள்

நொய் - அரை டம்ளர் ( 100 கிராம்)
இரண்டு மேசை கரண்டி - பாசி பருப்பு
ஒரு மேசை கரண்டி - கடலை பருப்பு
ஒரு மேசை கரண்டி - பர்கல் (தேவைப்பட்டால்)
ஒரு மேசை கரண்டி - ஜவ்வரிசி
அரை தேக்கரண்டி - வெந்தயம்

 மேலே குறிப்பிட்டவைகளை கஞ்சி செய்ய ஆரம்பிக்கும்முன் களைந்து ஊறவைத்து விடுங்கள்.


தாளித்து வேக வைக்க
எண்ணை - முன்று தேக்கரண்டி
கேரட்
பட்டாணி
முட்டை கோஸ்
பீன்ஸ்
சின்ன வெங்காயம் - 10 எண்ணிக்கை
பெரிய வெங்காய்ம் - 1
பூண்டு - 10 எண்ணிக்கை
தக்காளி - 1
பச்ச மிளகாய் - 2
பட்டை லவங்கம் ஏலம் - தலா 1
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு



கடைசியாக தாளிக்க
 எண்ணை + நெய் - இரண்டு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - ஆறு எண்ணிக்கை
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை - ஒரு சின்ன கொத்து
கொத்து மல்லி தழை -  கைக்கு ஒரு கொத்து

 கேரட்டையும் முட்டை கோசையும் நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்.
தக்காளி வெங்காயத்தையும் அரிந்து வைத்து கொள்ளவும்




ஒரு பெரிய சட்டியை அடிப்பில் வைத்து எண்ணை ஊற்றி காயவைத்து பட்டை கிராம்பு ஏலம் போட்டு பொடிய விடவும், கருவேப்பிலை பூண்டு சேர்த்து தாளிக்கவும்
பிறகு சின்ன வெங்காயம் , பெரிய வெங்காய்ம், சேர்த்து நன்கு வதக்கவும்,

அடுத்து தக்காளி, பச்ச மிளகாய் சேர்த்து வதக்கவும்
சிறிது மஞ்சள் தூள், மிளகாய் தூள் , உப்பு தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.  10 நிமிடம் மூடி போட்டு காய்கறிகளை வேக விடவும்.


அரிசி பருப்புவகைகள் எல்லாம் சேர்த்து ஒன்னறை கப்இருக்கும்

அதுக்குமுன்று மடங்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்

 நன்கு கொதி வந்ததும் ஊறவைத்த அரிசி பருப்புகளை சேர்த்து நன்குகிளறவும்

அடிபிடிக்காமல் அடிக்கடி கிளறி விட்டு கொள்ளவும், சிறிது கொத்து மல்லி தழை சேர்த்து கொதிக்க விட்டு அரிசி பருப்பு வகைகளை வேக விடவும்.


 கடைசியாக எண்ணை + நெய் விட்டு சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது கொத்துமல்லி கருவேப்பிலை போட்டு தாளித்து கஞ்சி யில் கொட்டி மீண்டும்கொதிக்க விட்டு இரக்கவும்.



சுவையான சைவ நோன்புகஞ்சி ரெடி
இதில் காய் கறிகள் உங்கள் விருப்பப்படி புரோக்கோலி, உருளை,காலிபிளவர் இது போல் சேர்த்து கொள்ளலாம்.

மஷ்ரூம் சேர்த்தும் செய்யலாம்.




How to make Veg nonbu kanjsi
How to make Rice with veg Soup
Step By Step Veg Soup

ரமலான் ஸ்பெஷல் சைவ நோன்பு கஞ்சி

நான் நோன்பு காலங்களில் இடை இடையில் இப்படி சைவ நோன்பு கஞ்சியும் தயாரிப்பேன்.
கீழே பல வகை நோன்பு கஞ்சி யின் லிங்க் இருக்கிறது சுட்டிகளை சொடுகிபார்க்கவும்


http://samaiyalattakaasam.blogspot.com/2009/08/blog-post_22.html

வெள்ளை வாயு கஞ்சி 


பிரியாணி கஞ்சி

மட்டன் கொத்துக்கறி ( மட்டன் கீமா) கஞ்சி

தேங்காய் பால் சீரக கஞ்சி


சிக்கன் ஹரீஸ்


மட்டன் கொத்து கறி கீமா கஞ்சி

-- http://samaiyalattakaasam.blogspot.com/2013/08/blog-post_3.html

டயட் நோன்பு கஞ்சி

http://samaiyalattakaasam.blogspot.com/2011/08/blog-post_11.html
ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப்
Tag: How to make Nonbu kanjsi, Ramadan Soup, Kanji, Porridge, Step By Step.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Monday, July 7, 2014

மட்டன் ஷம்மி கபாப்/மட்டன் கபாப் - Shammi Kabab



Shammi Kabab/Shami Kabab Sandwich/Mutton vadai/Mutton kheema Patties/Mutton Kheema Tikki


ஹோட்டலில் ஸ்டாட்டராக பரிமாறும்  ஷம்மி கபாப் இஸ்லாமிய இல்லங்களில் பிரசத்தி பெற்ற ஒரு ஸ்நாக்ஸ் வகை. எனக்கு ரொம்ப பிடித்த ஸ்டாட்டர் இது.



 Mutton kheema Patties /Mutton Tikki/Shammi Kabab

Ramalan Recipe/ நோன்பு கால சமையல்

தேவையான பொருட்கள்

  • கீமா(கொத்திய கறி ) - நூறு கிராம்
  • பூண்டு - நான்கு பல்லு
  • காஞ்சமிளகாய் - இரண்டு
  • பச்ச மிளகாய் - ஒன்று
  • கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி (பட்டைம்கிராம்பு,ஏலம்)
  • தேங்காய் - இரண்டு பத்தை
  • வெங்காயம் - ஒன்று
  • கொத்து மல்லி கீரை - கால் கட்டு
  • கடலை பருப்பு - கால் கப் 
  • மைதா,கார்ன்பிளர் பவுடர் - தலா ஒரு தேக்கரண்டி
  • ஆலிவ் ஆயில் - ஒரு தேக்கரண்டி
  • எண்ணை - பொரிக்க தேவயான அளவு


செய்முறை

கடலை பருப்பை அரைமணி நேரம் ஊறவைக்கவும்.அதற்குள் கொத்திய கறியை கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி அதில் காஞ்சமிளகய்,பூண்டு, பச்ச மிளகாய், உப்பு போட்டு சுருட்டி வேக வைத்து தண்ணிரை வற்ற விடவும்.



வற்றியதும் அதில் ஆலிவ் ஆயில்,வெங்காயம் போட்டு மேலும் ஒரு முறை பிறட்டி, கொத்து மல்லியும், தேங்காயை பொடியாக அரிந்து அல்லது துருவி சேர்த்து ஊறவைத்த கடலை பருப்பையும் சேர்த்து  சுருட்டி கரம் மசாலா பொடி சேர்த்து ஆறவக்கவும்.

.

ஆறியதும் மிக்சியில்  முதலில் மைதா, கார்ன்பிளார் மாவை போட்டு பிறகு ஆறிய கலவையை போட்டு நன்கு அரைக்கவும்




சில நேரம் கறி வடை செய்யும் போது உதிர்ந்து  போகும் அதற்கு முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து பிசறி சுடலாம்.



ஒரு தோசை கல்லை சூடு படுத்தி கொஞ்சமாக எண்ணை ஊற்றி காயவைத்து  வேண்டிய வடிவில் தட்டி போடவும்.



ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு நன்கு அழுத்தி விட்டு மறுபக்கம் வெந்ததும் கருகாமல் பொன்னிறமாக இருக்கும் போதே எடுத்து விடவேண்டும்.



மதியம் பிளைன் சாதத்துடன் , பருப்பு , கத்திரிக்காய் ரசத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.


காலை அல்லது இரவு உணவிற்கு பிரட்டுடன் சாண்ட்விச் போலவும் செய்யலாம்.



குழந்தைகளுக்கு பள்ளிக்கு எடுத்து செல்ல ரிச்சான சாண்ட்விச்.



Mutton Kheema vadai
How to make Mutton Shammi kabab - Step by Step

இது ரொம்ப ஷாப்டான பக்க உணவு மற்றும் ஸ்ட்டாடர், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவது.


நோன்பு காலங்களில் செய்யும் ஸ்பெஷல் வகை இந்த ஷாமி கபாப் .

 ப்ளைன் சாப்பாட்டுக்கு , கத்திரிக்கா ரசம் வைத்து இதை பக்க உணவாக வைத்து சாப்பிட மிக அருமையாக இருக்கும். இந்த காம்பினேஷன் எனக்கு ரொம்ப பிடிக்கும்.


 https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/