Wednesday, November 27, 2013

பிரட் ஊத்தாப்பம் - Bread Uththappam




Bread uththaappam

தேவையானவை

தோசை மாவு ஒரு கப்

ப்ரெட் ஸ்லைஸ்  ‍ 6
பொடியாக அரிந்த வெங்காயம் ‍ 2
பொடியாக அரிந்த பச்ச மிளகாய் ‍ 2
கருவேப்பிலை ‍ சிறிது
எணணை + நெய் (அ) பட்டர் சுட தேவையான அளவு


செய்முறை

தோசைமாவில் அரிந்து வைத்துள்ள வெங்காயம், பச்சமிளகாய், கருவேப்பிலையை கலக்கவும்.

தோசை தவ்வாவை காயவைத்து எண்ணை + பட்டர் ஊற்றிதோசை மாவில்  ப்ரட் ஸ்லைஸ்களை இருபுறமும்  தோய்த்து சுட்டெடுக்கவும்.
வித்தியாசமான சுவையுடன் ப்ரட் ஊத்தாப்பம் ரெடி

தோசை மாவில் தோய்க்க வரவில்லை என்றால் ப்ரட்டை தவ்வாவில் வைத்து கரண்டியால் ஒரு கரண்டி அளவிற்கு அள்ளி ஊற்றலாம்.



பிரட் ஊத்தாப்பத்துடன் சாம்பார் காம்பினேஷனில் சுவை சூப்பரோ சூப்ப்ராக இருக்கும்.

Linking to Gayatri's Walk Through memory lane hosted by Sahasra

 https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

Friday, November 22, 2013

Latest Hijab Design


 Latest Hijab Design @ Chennai Plaza 

Latest Stone + Flower  Hijab
Model No 2402 A


Hijab Model No 482 A

 Model No 482 A


Hijab Model No: 2383


Sh 2377D Lace with Stone Hijab 

Model No Q 10


Prayer makkannaa 


Model No XH 40

Model No : 2377A


Umbrella Type Hijab /Makkanna
 Sh 2307

Sh 2333 A


Model No: N 106 


Model No Q2S

Big Hijab


Address:
Chennai Plaza
No, 277/30 Pycrofts Road,1st Floor, (opp:shoba cut piece)
(Near Marina Beach/Express Avenue/Rathna Café)
Triplicane ,
Chennai 600 005
Tel: 91 44 4556 6787



Chennai Plaza is located in the heart of the Chennai City. We sell all varieties of burkas, shawl, shela, hijab, makkanna,
electronics items like rechargeable lights, fans, fancy items like necklace sets, earrings and clips,
general items like hand bags and purses. Ladies tailoring facility and xerox facility also available. 
We deal with imported high quality products and offer them at affordable rates. 
We sell all items in Retail and Wholesale.
Interested parties  may mention their quantities. Price vary according to quantity.
Most of the items are available Ex-Stock.
CHENNAI PLAZA
No, 277/30 Pycrofts Road,1st Floor, (opp:shoba cut piece)
(Near Merina Beach/Express Avenue/Rathna Café)
Triplicane ,
Chennai 600 005
Tel: 91 44 4556 6787
Mr.Mohideen Mob: 91 9176664687
Mr.Ibrahim Mob   : 91 98 43709497
Jaleelakamal           : 00971 50 5453400
Email id: chennaiplazaik@gmail.com
              feedbackjaleela@gmail.com
              kamal10182@gmail.com
 https://www.facebook.com/pag
es/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

Tuesday, November 19, 2013

சிக்கன் 65 - Chicken 65

சிக்கன் 65  - 1 - Chicken 65

ஹோட்டல்களில் பெரும்பாலும் அசைவத்தில் முதலில் ஸ்டார்டர் க்கு ஆர்டர் செய்வது சிக்கன் 65 அல்லது சிக்கன் லாலிபாப். அதை எளிதாக நாமே வீட்டில் செய்யலாம்.

சிக்கன் 65 என பெயர் வர காரணம் , ஹோட்டல்களில் மெனு கார்ட் வரிசையில் இந்த சிக்கன் ஃப்ரைக்கு 65 வது இடம்.அது எல்லோருக்கும் பிடித்து போகவே சிக்கன் 65 பிரபலமாகி  உள்ளது.

தேவையான பொருட்கள்
சிக்கன் லாலி பாப் 9 துண்டுகள் or Full Chicken
பூண்டு பேஸ்ட் – 1 மேசைகரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 மேசைகரண்டி
லெமன் ஜூஸ் – 1 மேசைகரண்டி
கார்ன் ப்ளார் மாவு – 1 மேசை கரண்டி
உப்பு – ¾ தேக்கரண்டி
கலர் பொடி – ஒரு சிட்டிக்கை  (விருப்ப்பட்டால்)
எண்ணை – பொரிக்க தேவையான அளவு

செய்முறை

சிக்கன் லாலி பாப்பை  வினிகர் சேர்த்து ஊறவைத்து நன்கு கழு
வி எடுக்கவும்.
சிக்கன் லாலிபாப்பை குறுக்காக நான்கு கீறல்கள் போடவும்.


மேற்கண்ட அனைத்துமசாலாக்களையும் சிக்கனில் போட்டு பிறட்டி 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறிய சிக்கனை , ஒரு ஆழமான வாயகன்ற வானலியில் எண்ணையை சூடு படுத்தி நன்கு மொருவலாக பொரித்து எடுக்கவும்.

இது எங்க வீட்டு அனைவருக்கும் ரொம்ப பிடித்தமான 65, என் பையன் ஹனீஃப்க்கு லாலி பாப் சிக்கன்  ரொம்ப பிடிக்கும். வாரம் ஒரு முறை செய்தே ஆகனும். என் தம்பி இங்கு இருந்தபோதும் அடிக்கடி இந்த சிக்கன் 65 தான் செய்து கொடுப்பேன், இப்ப தம்பி தானே சமைத்து சாப்பிடுவதால் இந்த குறிப்பு அவருக்காக இங்கு போட்டுள்ளேன். இது அவருக்கு செய்ய சுலமாக இருக்கும்.
இந்த லாலிபாப்பை பிரட், சப்பாத்தி,குபூஸ், மற்றும் பிளையின் சாதம் , கட்டி பருப்புடன் சாப்பிட மிக அருமையாக இருக்கும்.



 சிக்கன் 65 – 2 - Chicken 65

 தேவையான பொருட்கள்

கோழி – 1 கிலோ
மென்மையாக அரைத்த பூண்டு – 100 கிராம்
மிளகாய் தூள் – 50 கிராம்
உப்பு தேவைக்கு
கேசரி கலர் பொடி – 2 தேக்கரண்டி
எண்ணை – கால் கிலோ (பொரித்து எடுக்க)

 செய்முறை

How to Make Easy Chicken 65

கோழி துண்டுகளை நன்கு கழுவி சுத்தம் செய்து அதனுடன் அரைத்த பூண்டு, மிளகாய் தூள்,உப்பு, கேசரி பொடியை சிறிது தண்ணீரில் கலக்கி சேர்க்கவும். நன்கு மசாலா எல்லா துண்டுகளிலும் சேரும் படி தடவி, 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு ஒரு வாயகன்ற வானலியில் எண்ணை சூடு படுத்தி தீயின் தனலை மிதமாக வைத்து வானலியில் கொள்ளும் அளவிற்கு கோழி துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்.




கவனிக்க:
முன்பு (30 வருடம் முன்) ஒரு விசேஷம் என்றால் வீட்டில் சமையல் காரர்களை அழைத்து தான் செய்வோம். 5 படி மட்டன் பிரியாணி, 5 கிலோ கோழி வறுவல், 2 கிலோ எண்ணை கத்திரிக்காய்,3 கிலோ மைசூர் பாக் என்று, அப்படி எங்க வீட்டு ஓவ்வொரு விசேஷத்திலும், சமையல்காரருக்கு எல்லா சாமான்களை எடுத்து கொடுப்பது என் வேலை. இஞ்சி பூண்டு அவர் கேட்கும் அளவில் மிக்சியில் அரைத்து கொடுப்பதும் என் வேலை தான்.இன்னும் பல சமையல் வகைகள்,நான் இங்கு சமைக்கும் பாரம்பரிய சமையல் வகைகள் எல்லாமே என் பாட்டியின் அம்மாவின் அளவுகள். நான் என் சுவைக்கு ஏற்ப மாற்றி செய்து கொள்வேன்.
அப்படி சமைக்கும் போது இது என் அம்மா அவருக்கு கொடுத்த மசாலா சில நேரம் இப்படி செய்தால் ஈசியாக செய்து விடலாம்.
 சிலருக்கு சிக்கன் பொரிக்கும் போது அடியில் போய் அனைத்தும் ஒட்டி கொள்ளும், அதற்கு இஞ்சி பூண்டு ஒன்றாக சேர்ப்பதால் அப்படி ஆகிறது, வெறும் பூண்டு மட்டும் சேர்த்து பிரட்டினால் வானலியில் ஒட்டாமல் தனியாக பொரிந்து வரும்.
சிக்கன் 65 க்கு என்று ஸ்பெஷல் மசாலாக்கள் எல்லாம் கிடையாது.இப்ப தான் நிறைய் ரெடி மேட் மசாலாவகைகள் வந்துள்ளன. நல்ல சிவப்பாக பொன்முறுவலாக டிரையாக இருக்கும் அது தான் சிக்கன் 65.,


சிக்கன் 65 என பெயர் வர காரணம் , ஹோட்டல்களில் மெனு கார்ட் வரிசையில் இந்த சிக்கன் ஃப்ரைக்கு 65 வது இடம்.அது எல்லோருக்கும் பிடித்து போகவே சிக்கன் 65 பிரபலமாகி  உள்ளது.

இது முன்பு தயாரிக்கும் பொருட்களோடு நான் இப்ப கூட சேர்ப்பது, லெமன் சாறு + கார்ன் ப்ளார் மாவு (சோளமாவு) கேசரி கலர் பொடி கொஞ்சமாக சேர்ப்பது ,சில நேரம் சேர்ப்பதும் இல்லை. நல்ல நிதானமாக பொன்முறுவலாக பொரித்து எடுத்தாலே நல்ல நிறம் வரும்.


சிக்கன் 65 - 3


இதில் மேலே உள்ள பொருட்களுடன் வினிகர் மற்றும் சோயா சாஸ் சேர்த்து பொரித்து கொள்ளவேண்டியது.
தேவைப்பட்டால் 65 மசாலாவும் சேர்த்து கொள்ளலாம்.

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

Saturday, November 16, 2013

பொட்டு க‌ட‌லை துவைய‌ல்/கெட்டி சட்னி


பொட்டு க‌ட‌லை துவைய‌ல் - How to make Roasted Gram Chutney/ketti satney/கெட்டி சட்னி செய்வது எப்படி?

வயிறுக்கு இதமான சட்னி இட்லி, தோசை, ஆப்பம், பூரி, வடை, பஜ்ஜி, உளுந்து வடை, வெள்ளை கஞ்சி அனைத்துக்கும் பொருந்தும் அருமையான சட்னி.




தேவையான பொருட்கள்

பொட்டு க‌ட‌லை = கைக்கு ஒரு கை பிடி
தேங்காய் ப‌த்தை = இர‌ண்டு
ப‌ச்ச‌மிள‌காய் = ஒன்று
இஞ்சி சிறிய‌ துண்டு
வெங்காய‌ம் = கால் துண்டு
உப்பு = ருசிக்கு தேவையான‌ அள‌வு

செய்முறை

1.முத‌லில் தேங்காய் ப‌த்தை + ப‌ச்ச‌மிள‌காய் பொட்டு க‌ட‌லையை சேர்த்து அரைக்க‌வும்.
2. பாதி அரைந்த‌தும் இஞ்சி + வெங்காயம் + உப்பு சேர்த்து அரைத்து எடுக்க‌வும்.




குறிப்பு:

நோன்பு கால‌த்தில் வெள்ளை க‌ஞ்சி , ம‌சால் வ‌டை, பஜ்ஜி. உளுந்து வடைபொட்டு க‌ட‌லை துவைய‌ல் தொட்டு சாப்பிட‌ இத‌மாக‌ இருக்கும்.
நான் காரம் குறைவாக தான் பயன் படுத்துவேன், காரசாரமாக சாப்பிடுபவர்கள் பச்சமிளகாயின் அளவை கூட்டி கொள்ளவும்.

இதே சட்னியில் இஞ்சிக்கு பதில் பூண்டு சேர்த்தும் அரைக்கலாம்.
கொத்துமல்லி , சிறிது புளி அல்லது எலுமிச்சை சேர்த்தும் அரைக்கலாம்.

பரிமாறும் அளவு - முன்று நபர்களுக்கு
ஆயத்த நேரம் - 3. நிமிடம்
சமைக்கும் நேரம் - 3.நிமிடம்

கொத்துமல்லி பொட்டுகடலை சட்னி



Linking to Gayatri's Walk Through memory lane hosted by Sahasra

அனைவரும் நலமா? ஊருக்கு போய் நல்லபடியாக திரும்பி வந்துவிட்டேன். இது முன்பே போட்டு வைத்து இருந்த குறிப்பு. ஏதும் போஸ்ட் பண்ண முடியல ஊர் ஞாபகமாகவே இருக்கிறது. முடிந்த போது வந்து குறிப்புகளை பகிர்கிறேன்.

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam