Saturday, April 27, 2013

மாங்காய் ராஜ்மா சாலட் (கர்பிணி பெண்களுக்கு)




டயட் செய்பவர்களுக்கு  மிக அருமையான சாலட், காலை நேரம் ஒரு பவுள் சாப்பிடலாம்.
கர்பிணி பெண்களுக்கும் சாப்பிட வாய்க்கு ருசியாக இருக்கும்.
பார்டியில் வைக்க சுலபமான சாலட் .பார்க்க கலர் ஃபுல்லாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்

மாங்காய் - சிறியது ஒன்று

வேகவைத்த ராஜ்மா - 2 மேசை கரண்டி


கலக்க வேண்டிய சாஸ் வகைகள்:

லெமன்,தேன், மிளகு தூள், உப்பு - தலா கால் தேக்கரண்டி







செய்முறை: 
மாங்காயை 2” நீளத்துக்கு ஸ்லைஸ்  செய்யவும்.
அத்துடன் ராஜ்மாவை சேர்க்கவும்.

ட்ரெஸ்ஸிங் கலவையை நன்கு கலக்கி மாங்காய் ராஜ்மா கலவையுடன் சேர்க்கவும்.
குளிரூட்டியில் அரை மணி நேரம் குளிரவைத்து சாப்பிடவும்.



ராஜ்மா வேக வைக்கும் முறை: ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ராஜ்மாவை முழுகும் வரை தண்ணீர் சேர்த்து 8 மணி நேரம்  ஊறவைக்கவும்.
ஊறியதும் குக்கரில் சிறிது உப்பு சேர்த்து ஒரிரு விசில் வைத்து இரக்கவும்.
வெந்ததை வடிக்கட்டி சாலட்க்கு பயன் படுத்தவும்.

வெளிநாடுகளில் டின் களில் கிடைக்கின்றன பேச்சுலர்களுக்கும் இன்னும் சுலபம், இப்போது மாங்காய் சீசன் என்பதால் அடிக்கடி வாங்கி இப்படி செய்து சாப்பிடலாம்.
இதே போல் கொண்டைகடலை வேர்கடலை போன்றவை வேகவைத்து அதனுடன் மாங்காய் சேர்த்து செய்தும் சாப்பிடலாம்.

. அவசர பசிக்கு உடனடி ஹெல்தி சாலட் . நல்லதொரு பில்லிங்காக இருக்கும்.

ராஜ்மா அதிக அளவில் உணவில் சேர்த்து கொண்டால் புற்றுநோய் வராமல் பாதுகாத்து கொள்ளலாம்.
இது என்னுடைய ஐடியா.ராஜ்மா மசாலாசெய்து சாண்ட்விச் செய்தேன், அப்படியே மீதமுள்ள ராஜ்மாவில் இபப்டி செய்தது.
எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது, உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.




linking to virunthu unna vaangka viji's show your style to world and soul food show & giveaway

Thursday, April 25, 2013

முக்கனி ஜூஸ் (மா பலா வாழை)












முக்கனி ஜூஸ் ( மா பலா வாழை ) முன்றும் முக்கனி இது என் கிரான்பாவிற்கு  ரொம்ப பிடித்தமான ஜூஸ் என்று என் கிரான் மா அடிக்கடிசொல்வார்கள்.
கிரான்பாவை (அம்மாவுடைய அப்பா) பார்த்தது கிடையாது. அவர்கள் ரங்கூனில் இருந்து அங்கேயே காலமாகிவிட்டார்கள்.



தேவையானவை


மாம்ப‌ழ‌ம் = ஒன்று
ப‌லா ப‌ழ‌ம் = ஐந்து
வாழைப‌ழ‌ம் = ஒன்று
பால் = முன்று ட‌ம்ள‌ர்
த‌ண்ணீர் = ஒரு ட‌ம்ள‌ர்
ஐஸ் க‌ட்டிக‌ள் = ப‌த்து
சர்க்கரை (தேவை பட்டால் சேர்த்து கொள்ளலாம்)

செய்முறை

மாம்ப‌ழ‌ம் ம‌ற்றும் ப‌லாப‌ழ‌த்தை கொட்டை இல்லாம‌ல் பொடியாக‌ அரிந்து எடுத்து கொள்ள‌வும்.வழை பழத்தையும் பொடியாக அரிந்து கொள்ளவும்.
பாலை காய்ச்சி ஆற‌வைக்க‌வும்.
மிக்சியில் ப‌ழ‌ங்க‌ள், பால், த‌ண்ணீர்,ஐஸ் க‌ட்டிக‌ள் அனைத்தையும் சேர்த்து ந‌ன்கு நுரை பொங்க‌ அடித்து ஜூஸ் ட‌ம்ள‌ரில் ஊற்றி குடிக்க‌வும்.


வித்தியாச‌மான‌ காம்பினேஷ‌னில் சூப்ப‌ர் பான‌ம்.

படம் சரியாக வரவில்லை, இது நான் நான்கு வருடம்  முன்பு எடுத்தது. பழைய போஸ்ட் தான் ரீபோஸ்ட் செய்துள்ளேன்.

இங்கு துபாயில் பலாபழம் கிடைக்க  வில்லை, .டின் ஃபுட்டில் ரெடி மேட் பலா தான் கிடைக்கிறது. அப்படியே கிடைத்தாலும் சுவை இருககாது. ஒரு முறை ஆசை பட்டு வாங்கிட்டு வீணாகி விட்டது.

ஊருக்கு போனால் முதல் வேலை இங்கு கிடைக்காத பழம், காய், கீரைகளை தேடி வாங்கி செய்து சாப்பிடுவோம்.

அதில் பலாபழம் தான் முதலில் வாங்கி சாப்பிடுவது.  முன்பெல்லாம் யாரிடமாவது சொல்லி விட்டு வாங்கி சாப்பிடுவேன்.
இப்ப கடை ஆரம்பித்ததில் இருந்து க்டை வாசலிலேயே பழகடைகள் கிடைக்கின்றன . தினம் சென்னை ப்ளாசா கடைக்கு போகும் போது வாங்கி கொண்டு செல்வேன்.எல்லாரும் ஒன்றாக சாப்பிடுவோம்.



virunthu unna vaangka viji's show your style to world

Monday, April 22, 2013

மட்டன் தக்குடி (கொழுக்கட்டை) - Mutton Kuzukkatai



இந்த மட்டன் தக்குடி இஸ்லாமிய இல்ல பல வகை சமையல் வகைகளில் இதுவும் ஒன்று
மிகவும் சத்தான டிபன் வகை.

எங்க வீட்டு கல்யாணங்களில் கல்யாணம் முடிந்து  அன்று மாலை அல்லது மறுநாள் பெண்ணை மாப்பிள்ளை வீட்டுக்கு பூஜோடிச்சி அனுப்பும் போது அன்று அனைவருக்கும் செய்யும் ஸ்பெஷல் டிபன் வகை. ரொம்ப அருமையாக இருக்கும்.
இது நிறைய செய்வது ரொம்ப சிரமம், இப்போது யாரும் செய்வதில்லை வேலை பாடு ஜாஸ்தி என்று , மட்டன் சேமியா, மட்டன் மக்ரூனி அதுவும் வெளியில் ஆர்டர் கொடுத்து விடுகின்றனர்.

முன்பு கல்யாண வீட்டில் நாங்கள்  அனைவரும் ஒன்று கூடி மொத்தமாக உட்கார்ந்து அரட்டை அடித்து கொண்டே இந்த தக்குடியை நன்கு குழைத்து பிடித்து பெரிய பெரிய தாலா க்களில் வைத்து சமையனாவிடம் கொடுது அனுப்புவோம்.
அடுத்து இப்ப இரண்டு வருடம் முன் ஒரு கல்யாணத்தில் தக்குடி தான் போடனும் என்று முடிவு செய்து ஒரு வாரம் ஆள் வைத்து சமைத்தார்கள்.
அன்று தக்குடி போட்டார்கள், பூ ஜோடிப்பு எல்லாம் முடிந்தது, சமையல்காரரும் தக்குடி தம் போட்டு விட்டு வேறு வேலையாக வெளியில் போய் விட்டார். சட்டிய திறந்து தக்குடி எடுக்கிறார்கள் அது கொழுக்கட்டை பிடித்து போட்ட மாதிரி அப்படியே இருக்கு வேகவில்லை.
பிறகுதான் வந்த சமையனாவுக்கு தக்குடி போட தெரியாது, அதை பிரியாணி போல் தாளித்து தம் போட்டு விட்டு போய்விட்டார்,

தக்குடி செய்வதாக இருந்தால்  கறி தாளிச்சி தண்ணீர் அளந்து ஊற்றி  தர தரன்னு கொதிக்கும் போது ஓவ்வொரு குழக்கடைகளாக  பிடிச்சி போடனும் சிறிது நேரம் கழித்து உடையாமல் அதறகென நீட்டு கண் அகப்பை கொண்டு லேசாக கிழிருந்து மேலாக பிரட்டி விடனும், இதே போல் 10 நிமிடத்துக்கு ஒரு முறை அடி பிடிக்காமல் கிளறி விடனும்
நல்ல பழக்க பட்டவர்களுக்கு ஈசி , பதம் பார்த்து இதை செய்ய்யாவிட்டால் எல்லாம் வீணாகிடும்.

இன்னும் தெளிவாக ஸ்டெப் பை ஸ்டெப்பாக இந்த குறிப்பை பார்க்க இங்கு சென்று பார்க்கலாம்




கறி கொழுக்கட்டை (தக்குடி)
தேவையான பொருட்கள்
*************************************
வருத்த மாவு - 400 கிராம்( இரண்டு டம்ளர்)
மட்டன் - 400 கிராம்
மாவில் விறவி கொள்ள
**********************************
வெங்காயம் - இரண்டு
பச்ச மிளகாய் - ஒன்று
கொத்து மல்லி  தழை - கால் கப்
புதினா - கால் காப்
தேங்காய் துருவியது - அரை முறி
உப்பு  - அரை தேக்கரண்டி




கறி தாளிக்க
*****************
எண்ணை  - கால் கப்
பட்டை - ஒரு அங்குலம் அளவு ஒன்று
கிராம்பு - இரண்டு
ஏலக்காய் - இரண்டு
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
பச்ச மிளகாய்  - ஒன்று
கொத்து மல்லி -  சிறிது
புதினா - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு மேசை கரண்டி
மிளகாய் தூள் - முக்கால் தேக்கரண்டி
தனியாத்தூள் - ஒன்ன்ரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - முன்று தேக்கரண்டி (தேவைக்கு)


கடைசியில் கரைத்து ஊற்ற 
****************************************
வருத்த மாவு -  இரண்டு மேசை கரண்டி







செய்முறை
***************
1. முதலில் கறியை கழுவி வைக்கவும். வெங்காயம்,தக்காளியை அரிந்து வைக்கவேண்டும். மசாலா தூள் வகைகளையும் ரெடியாக வைக்கவும், புதினா, கொத்துமல்லி யை மண் போக கழுவி தண்ணீரை வடித்து வைக்க வேண்டும்.
2. இஞ்சி பூண்டு பேஸ்ட்,உப்பு,மாவு, மாவில் கலக்க வேண்டிய வெங்காயம்,பச்சமிளகாய்,கொத்துமல்லி,புதினாவை பைனாக சாப் பன்ணி ரெடியாக வைக்க வேண்டும்.
3.ஒரு பெரிய வயகன்ற சட்டியில் எண்ணையை காய வைத்து அதில் பட்டை,கிராம்பு,ஏலத்தை போட்டு பொரிய விட வேண்டும். பொரிந்ததும் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்க வேண்டும்.
4.வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் பொட்டு நன்கு பச்ச வாடை போகும் வரை வதக்க வேண்டும்.
5.தக்காளி, கொத்துமல்லி, புதினா, பச்சமிளாயை போட்டு நன்கு வதக்கவும்.



6.எல்லா தூள்வகைகளையும்(உப்பு,தனியா,மஞ்சள்,மிளகாய்)போட்டு நன்கு பிரட்ட வேண்டும்.
7.ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து மூடி போட்டு வேக விட வேண்டும்.
8.பிறகு ஒன்றுக்கு முன்று மடங்கு தண்ணீர் ஊற்றி  கொதிக்க விட வேண்டும்.
9. மாவில் தேங்காய்,சிறிது உப்பு,கொத்துமல்லி,புதினா,வெங்காயம் நல்ல பைனா எல்லாவற்றையும் சாப் செய்து போட்டு கிளறி வைக்க வேண்டும்.கொதித்த கறி தண்ணீரிலிருந்து இரண்டு டம்ளர் மசாலா தண்ணீரும் எடுத்து கொள்ளவேண்டும். (இது மாவு கொழுக்கட்டை பிடிக்க விறவுவதற்கு)



 10. மசாலா தண்ணீரை மாவில் போட்டு பிசறி நன்கு அழுத்தி குழைத்து கொள்ள வேண்டும்.(மசாலா தண்ணீர் ஊற்றி பிடித்தால் தான் இது நல்ல டேஸ்டாக இருக்கும்)

 11.குழைத்த மாவை கொழுக்கட்டைகளாக பிடித்து தட்டில் அடுக்கி வைக்க வேண்டும்.
12.பிடித்த கொழுக்கட்டைகளை ஒவ்வொன்றாக கொதித்து கொண்டிருக்கும் கறி மசாலாவில் போட வேண்டும்.
13. போட்ட தும் கரண்டியை போட்டு கிண்ட கூடாது கொழுகட்டை கரைந்து விடும்.
ஒரு தோசை கரண்டி அல்லது கட்டை கராண்டியால் லேசாக ஒன்றோடு ஒன்று ஒட்டமல் பிறட்டி விட வேண்டும்.
14.கறியும், கொழுக்கட்டையும் ஒரே நேரத்தில் வெந்துவிடும். முதலே கறி வெந்துவிட்டால்  கறிரைந்து விடும்.
15.இப்போது கரைத்து ஊற்ற வேண்டிய மவை தண்ணீரில் கரைத்து ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.
 16.. லேசகாக கிளறி விட வேண்டும்.
17. கடைசியில் தம் போடும் கருவி (அ) தோசை தவாவை வைத்து பத்து நிமிடம் சிம்மில் வைத்து இரக்கவேண்டும்.

18 . சுவையான கறி தக்குடி (கொழுக்கட்டை ரெடி).






குறிப்பு
************
வறுத்த மாவு தயாரிக்கும் முறை
***********************************
மொத்தமாக 3 கிலோ பச்சரிசி (அ) சிகப்பரிசியை நன்கு களைந்து வடிகட்டி ஒரு மெல்லிய துணியில் காயவைத்து மிஷினில் கொடுத்து திரித்து கொள்ளவேண்டும்.
இதை ( கொழுக்கட்டை, வெல்லம் உருண்டை ,வணக்கம், சுத்திரியான், தட்டு ரொட்டி ( அரிசிமாவு ரொட்டி, பத்திரி) , புட்டு, இனிப்பு கொழுக்கடை) போன்றவை செய்ய பயன்படுத்தலாம்,
திரித்த மாவை ஒரு பெரிய இரும்பு வானலியில் போட்டு நன்கு அடி பிடிக்காமல் வறுக்கனும்.
 வறுத்ததை ரவை சலிக்கும் சல்லடையில் சலித்து கொள்ளவேண்டும் .
அப்படி இல்லை என்றால் ஆட்டு தக்குடி என்பார்கள் , அதாவது அரிசியை ஊறவைத்து மிக்சியில் கெட்டியாக ஆட்டி அதனுடன் சிறிது ரெடி மேட் அரிசி மாவு கலந்து தக்குடியாகவும் செய்யலாம்.

இதைராகி மற்றும்  ரவையிலும் செய்யலாம். ரவையை நன்கு வறுத்து கொள்ள வேண்டும்.
எலும்புடன்  உள்ள மட்டன் போட்டால் போட்டால் தான் சுவை அதிகமாக இருக்கும்.
கறிக்கு பதில் சிக்கன், இறால், வெஜிடேபுள்ஸ் சேர்த்தும் செய்யலாம்.

கல்யாணவீட்டு மெனு, ஈத் ஸ்பெஷல் ( ஹஜ் பெருநாள்)

Thursday, April 18, 2013

மாங்காய் ஊறுகாய் - Mango Pickle










இதுக்கு புளிப்பும் இனிப்பும் சேர்ந்த கிளிமூக்கு மாங்காயாக இருந்தால் நல்ல இருக்கும்.கர்பிணிபெணகளுக்கும் மசக்கையின் போது ஏற்படும் வாய் கசப்பு கொமட்டலுக்கு ஏற்ற அருமையான ஊறுகாய்.
கர்பிணி பெண்களுக்கு  மற்றும் இல்லை அனைவருக்கும் இந்த ஊறுகாய் பிடிக்கும்.



ஒரு பெரிய மாங்காய் = ஒன்று
உப்பு = தேவைக்கு
மஞ்சள் தூள் = கால் தேக்கரண்டி
வெல்லம் = ஒரு சின்ன துண்டு

வறுத்து பொடிக்க
காஞ்ச மிளகாய் = நான்கு
வெந்தயம் ‍ = கால் தேக்கரண்டி
தனியா = அரை தேக்கரண்டி
தாளிக்க‌
எண்ணை = இரண்டு மேசை கரண்டி
கடுகு = அரை தேகக்ரண்டி
காஞ்ச மிளகாய் ‍= ஒன்று
கருவேப்பிலை = சிறிது
பூண்டு = முன்று பல்

1 . வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை கொஞ்சமா எண்ணையில் வறுத்து ஆறியதும் பொடித்து கொள்ள‌வும்.
2. மாங்காய‌யை பொடியாக‌ அரிந்து கொள்ள‌வும், கொட்டையை தூக்கி போட்டுவிட‌ வேண்டாம் அதை சாம்பார் (அ) மீன் குழ‌ம்பில் போட்டு கொள்ள‌லாம்.
3. ஒரு வான‌லியில் எண்ணை விட்டு தாளிக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளை தாளிக்க‌வும்.
4. மாங்காயை போட்டு கிள‌ற‌வும். உப்பு, ம‌ஞ்ச‌ள் பொடி சேர்த்து பொடித்த‌ பொடியையும் போட்டு ந‌ன்கு பிற‌ட்டி ஐந்து நிமிட‌ம் வேக‌விட்டு க‌டைசியாக‌ வெல்ல‌த்தை தூவி இர‌க்க‌வும்.

செய்யும் போதே நாவில் நீர் ஊற‌ ஆர‌ம்பித்து விடும்.
அப்ப‌டியே இர‌ண்டு முன்று நாட்க‌ளில் சாப்பிட்டு முடிக்க‌ வேண்டிய‌து தான். க‌ரிபிணி பெண‌க‌ள் வாய்க்கு ருசிப‌டும், ஏன் ந‌ம‌க்குதான்.
குறிப்பு
வ‌றுத்து பொடிக்க‌ சோம்பேறி த‌ன‌மா ? அப்ப‌டியே எண்னையில் போட்டு தாளிக்க‌வும், மிள‌காய் தூள் ஒரு தேக‌க்ர‌ண்டி, வெந்த‌ய‌ பொடி (அ) வெந்த‌ய‌ம், தாளித்தும் எண்ணையில் போட்டு விட்டு பிற‌கு மாங்காயை போட்டு பிற‌ட்ட‌வும், க‌ல‌ரும் சூப்ப‌ராக‌ வ‌ரும்.



Linking to virunthu unna vaangka viji 's Show your style to world and Gayathiri's Walk through memory lane hosted by my home manthra






Sunday, April 14, 2013

தர்பூசணி அரிசி பாதம் கீர் - Rice Badam Kheer with Watermelon





இது இஸ்லாமிய இல்ல கல்யாண விருந்துகளில் மாப்பிள்ளை தஸ்தரில் வைக்கும் பல வித கீர் வகைகளில் ஒன்று அரிசி பாதம் கீர், இதில் தர்பூசணி ஜூஸ் மட்டும் கூட சேர்த்து இருக்கு அவ்வளவு தான்.
முன்பே இங்கு முந்திரி ரவை கீர், பேரிட்சை , ஜவ்வரிசி கீர், ரைஸ் பிஸ்தா கீர் எல்லாம்  பகிர்ந்து இருக்கிறேன்

தேவையான பொருட்கள்


தரமான பாசுமதி அரிசி  - 25 கிராம்
தர்பூசனி ஜூஸ் - 100 மில்லி
பால் - 100 மில்லி
பாதம் பருப்பு - 10 எண்ணிக்கை
முந்திரி  - 6 எண்ணிக்கை
ஏலம் - 3 எண்ணிக்கை
சர்க்கரை - 50 கிராம்
ஸ்வீட்ன் கண்டென்ஸ்ட் மில்க் - சிறிய டின் - 1
கால் சிட்டிக்கை கலர் பொடி



செய்முறை

பாசுமதி அரிசியை பொடித்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
பாதத்த்தை வெண்ணீரில் ஊறவைத்து தோலை எடுக்கவும்.
பாதம் பருப்பையும் அரிசியையும் சேர்த்து முக்கால் பதத்துக்கு அரைத்து கொள்ளவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பால் , ஏலம், அரைத்த விழுது அனைத்தையும் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
அதில் தர்பூசனி சாறு, கண்டென்ஸ்ட் மில்க், சர்க்கரை, கலர் பொடி சேர்த்து கலக்கி சிறிது நேரம் திக்காக ஆகும் வரை 2 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு இரக்கவும்.
கடைசியாக சிறிது நெய்யில் முந்திரியை வறுத்து தர்பூசனி கீரில் சேர்க்கவும்.
சுவையான மனமான தர்பூசனி பாதாம் ரைஸ் கீர் ரெடி.




முஸ்லீம் திருமணங்களில் மாப்பிள்ளை தஸ்தரில் வைக்கும் சுவையான பிர்ணி இது , இதை வெள்ளை பீர்னி  ,மஞ்சள் பீர்னி ன இருவகைகளாக தயாரிப்போம். வெள்ளை பீர்ணி என்பது ரவை முந்திரி சேர்த்து செய்வது அல்லது அரிசி , முந்திரி, பாதாம் அரைத்து செய்வது ஒரு வகை, மஞ்சள் பீர்னி என்பது ரவை பாதம் சாப்ரான் சேர்த்து அரைத்து செய்வது அல்லது அரிசி பாதாம் , சாஃப்ரான் சேர்த்து அரைத்து செய்வது. கொஞ்சம் கலர் பொடியும் சேர்த்து செய்யலாம், இது மற்றொரு வகை.

இதில் நான் தர்பூசணி ஜூஸ் சேர்த்து செய்துள்ளேன். வேண்டாம் என்றால் அதை தவிர்த்து வெறும் பீர்னி யாக வும் தயாரித்து கொள்ளலாம்.

இதை பன், நாண், தோசை, இடியாப்பம் ஆகியவைக்கு பக்க உணவாக வைத்து சாப்பிடலாம்.


முந்திரி ரவை பீர்னி/கீர்

பிஸ்தா கிர்/பீர்னி


*********

ஆங்கில பிலாக்கில் நிறைய தோழிகள் மாதந்திர ஈவண்ட்களும் நடத்தி வருகின்றனர். 
சில ஈவண்டில் சமையல் செய்யும் (magic mingle two ingredients)   இரண்டு தேவையான பொருட்கள் கொடுத்து செய்ய சொல்வார்கள்,அதில் இந்த இந்த மாதம் செய்ய கொடுத்துள்ள இரண்டு பொருட்கள் அரிசி, தர்பூசணி.
இதனால் ஒன்றும் அவார்டோ  பரிசோ  ஏதும் கிடையாது, சும்மா  சும்மா சும்மா தான்.

இப்படி யோசித்து புதுசாக செய்வது எனக்கு பிடித்துள்ளது ஆகையால் தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்.

 இதுக்குன்னு நெட்டில் போய் தேடுவது கிடையாது .வழமையாக செய்யும் சமையலிலேயே இதை சேர்த்து செய்ய முடியுமான்னு யோசித்து தான்  மாத மாதம் அந்த ஈவண்டுக்கு செய்து லின்க் பன்ணி கொண்டு இருக்கிறேன்.
போன மாதம் விருந்து உண்ண வாங்க விஜி ஈவண்டுக்கு யோசித்து வைத்து செய்வதற்குள் ஈவண்ட் தேதியே முடிந்து விட்டது. 
இந்த மாதம் இரண்டு ரெசிபி செய்தேன். இன்னும் இதில்  நிறைய ஐடியா இருக்கு பின்பு செய்து பார்த்தால் பகிர்கிறேன்.
தர்பூசணி அரிசி வெல்ல உருண்டை

தர்பூசணி அரிசி பாதாம் கீர்.

இரண்டுமே சூப்பராக இருந்தது. 



பதிவுலக தோழ தோழியர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

சவூதியில் வேலைபுரிபவர்களின் கவனத்திற்கு!




சவூதியில் வேலைபுரிபவர்களின் கவனத்திற்கு!

சவூதி உள்துறை அமைச்சக விதிமுறைகள் மீறல் அபராதங்களின் புதிய பட்டியலை 08.04.2013 அன்று வெளியிட்டுள்ளது..
இந்த விபரங்கள் பின்வருமாறு:

1. இக்காமா காலாவதி ஆகும் தேதிக்கு (Expiry Date) 3 நாட்கள் முன்னதாக இக்காமாவை புதுப்பிக்க (Renewal) சமர்ப்பிக்க வேண்டும்.

மீறினால்: இக்காமா கட்டணத்தின் இருமடங்கு செலுத்த வேண்டும்

2. அரசு அதிகாரிகள் இக்காமா-வை காண்பிக்கச் சொல்லி கேட்கும்போது தகுந்த காரணங்கள் அன்றியே காண்பிக்க வேண்டும்

மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்இரண்டாம் முறை – SR 2000அபராதம்மூன்றாம் முறை – SR 3000 அபராதம்

3. எக்ஸிட்-ரீஎன்ட்ரி விசாவையோ அல்லது ஃபைனல் எக்ஸிட் விசாவையோ பயன்படுத்தாமல் இருந்தால் முறையாக கேன்ஸல் செய்ய வேண்டும்.

மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்இரண்டாம் முறை – SR 2000அபராதம்மூன்றாம் முறை – SR 3000 அபராதம்

4. இக்காமா தொலைந்து விட்டால் தொலைந்த 24 மணி நேரத்திற்குள் புகார் செய்ய வேண்டும்.

மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்இரண்டாம் முறை – SR 2000அபராதம்மூன்றாம் முறை – SR 3000 அபராதம்

5. ஃபேமிலி விசாவில் குடும்பத்தோடு வசிப்பவர்களின் மனைவியோ பிள்ளைகளோ சவூதியில் பணி புரிய அனுமதி இல்லை.

மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்இரண்டாம் முறை – SR 2000அபராதம்மூன்றாம் முறை – SR 3000 அபராதம் மற்றும் யார் இக்காமாவில்ஃபேமிலி விசா உள்ளதோ அவர் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார்.

6. விசிட்பிஸினஸ் அல்லது உம்ராஃஹஜ் விசாவில் வருபவர்கள் அவர்களது விசா தேதி காலாவதி ஆகும் முன் சவூதியை விட்டு வெளியேறி விட வேண்டும். மேலும் உம்ராஃஹஜ் விசாவில் வந்தவர்கள் மக்கா ஜெத்தா மற்றும் மதீனாவைத் தவிர வேறெந்த நகரங்களும் செல்லக்கூடாது.

மீறினால்: சிறை மற்றும் அபராதம்மேலும் சவூதியை விட்டு வெளியேற்றப்படுவார். மேலும் யார் இக்காமாவில் விசிட் விசா எடுக்கப்பட்டதோ அவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார்.

7. விசிட் விசாவில் வந்து சவூதியில் வேலை பார்க்க அனுமதி இல்லை.

மீறினால்: சவூதியில் இருந்து வெளியேற்றப்படுவார். அவருக்கு வேலைகொடுத்தவர் வெளிநாட்டவராக’ (இக்காமா வைத்திருப்பவர்) இருந்தால் அவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படலாம்

8. இக்காமா ஃ விசா ஆகியவற்றை டூப்ளிகேட்டாக செய்தல் அல்லது செய்ய உதவுதல் இதர ஆவணங்களை ஃபோர்ஜரி செய்வது விசாக்களை விற்பது ஆகியவை கடுங்குற்றமாகும்.

மீறினால்: SR 10000 அபராதமும் (அல்லது) மாத சிறைத் தண்டனையும் (அல்லது) இரண்டும் விதிக்கப்பட்டு இருவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவர்.

9. ஹஜ்ஃஉம்ரா விசா தேதி காலாவதி ஆனவர்களை வேலைக்கு அமர்த்துவதுஅவர்களுக்கு இருக்க இடம் கொடுப்பதுபுகலிடம் அளிப்பது;வாடகைக்கு வீடு கொடுப்பது அவர்களை வாகனங்களில் அழைத்துச் செல்வது முதலானவை குற்றமாகும்.

மீறினால்: உதவியவருக்கு SR 10000 அபராதம் மற்றும் ஒரு மாத சிறைத் தண்டனை. மேலும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார். எத்தனை பேருக்கு அவ்வாறு உதவினோமோ அத்தனை முறை அபராதம்மற்றும் சிறைத் தண்டனை கூடும்.

10. தன்னுடைய கஃபீல் ஃ நிறுவனத்திற்கு வேலை செய்யாமல் பிற கஃபீல்ஃநிறுவனம்ஃசொந்த தொழில் செய்வது – பணி புரிவது குற்றம். மேலும் தன்னுடைய கஃபீலிடமிருந்து ரிலீஸ் லட்டர் வாங்கி தற்போது பணிபுரியும் நிறுவத்தில் கஃபாலத் – ஸ்பான்ஸர்ஷிப்’ மாற்றாமல் வேலை செய்வதும் குற்றம்.

மீறினால்: இக்காமா கேன்ஸல் செய்யப்பட்டு சவூதியிலிருந்து வெளியேற்றப்படுவார். வெளியேற்றப்பட்ட தேதியிலிருந்து இரு வருடங்களுக்கு சவூதிக்கு புது விசாவில் திரும்ப முடியாது

11. தொழிலாளியின் கஃபீல் ஃ நிறுவனத்தில் வேலை செய்யாமல்தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்ய வாய்ப்பளிக்கும் வெளிநாட்டு முதலாளிகள் (இக்காமா உள்ளவர்கள்) குற்றமிழைத்தவர் ஆவர்.

மீறினால்: SR 5000 அபராதம் அல்லது ஒரு மாத சிறைத் தண்டனை அல்லது இரண்டும்

12. மாதா மாதம் அல்லது வருடத்திற்கு பணம் பெற்றுக் கொண்டு தொழிலாளர்களை சொந்தமாக தொழில் செய்ய அனுமதிப்பதும் அல்லது பிற நிறுவனங்களில் வேலை செய்ய அனுமதிப்பதும் (கூலி கஃபீல்) குற்றமாகும்.

மீறினால்: கூலி கஃபீலுக்கு முதல் முறை – SR 5000 அபராதம் ரூ ஒரு மாத சிறைத் தண்டனைஇரண்டாம் முறை – SR 20000 அபராதம் இரு மாத சிறைத் தண்டனைமூன்றாம் முறை – SR 50000 அபராதம் மூன்று மாத சிறைத் தண்டனை. எத்தனை பேர்களை அவ்வாறு அனுமதித்தாரோ அத்தனை முறை அபராதமும் சிறைத்தண்டனையும் கூட்டப்படும்.

13. இக்காமா இல்லாதவர்களையோ இக்காமா காலாவதி ஆனவர்களையோ விசா முடிந்தவர்களையோ வாகனத்தில் கொண்டு செல்வது குற்றமாகும்.

மீறினால்: முதல் முறை – SR 10000 அபராதம் ரூ ஒரு மாத சிறைத் தண்டனைஇரண்டாம் முறை – SR 20000 அபராதம் மூன்று மாத சிறைத் தண்டனைமூன்றாம் முறை – SR 30000 அபராதம் ஆறு மாத சிறைத் தண்டனை. மேலும் இக்காமா கேன்ஸல் செய்யப்பட்டு சவூதியிலிருந்து வெளியேற்றப்படுவார்.

14. வேலை செய்யாமல் ஓடி விட்டதாக ஒரு தொழிலாளி மீது தவறாக சவூதி முதலாளி (கஃபீல்) ஹுரூப் கொடுத்தல் குற்றமாகும்

மீறினால்: SR 5000 அபராதம் மற்றும் அவரது நிறுவனம் பிளாக் லிஸ்ட் செய்யபடும்.

15. ஹுரூப் கொடுக்கப்பட்டவரை (ஓடி வந்தவரை) வேலைக்கு அமர்த்துதல் குற்றம்.

மீறினால்: ஹுரூப் கொடுக்கப்பட்டவருக்கு SR 2000 அபராதம் அல்லது இரு வாரம் சிறைத் தண்டனை மற்றும் இக்காமா கேன்ஸல் செய்யப்படும். வேலைக்கு அமர்த்தியவரின் பொறுப்பில் சவூதியை விட்டு அனுப்பப்படுவார். வேலைக்கு அமர்த்திய சவூதிக்கு முதல் முறை SR 2000 அபராதம் அல்லது இரு வாரம் சிறைத் தண்டனைஇரண்டாம் முறை SR 3000 அபராதம் அல்லது ஆறு வாரம் சிறைத் தண்டனை

16. ஹுரூப் கொடுக்கப்பட்டவரை (ஓடி வந்தவரை) அரசாங்கமோ அல்லது அவரது கஃபீலோ பிடித்தால்

ஹுரூப் கொடுக்கப்பட்டவர் கைது செய்யப்படுவார். சவூதியை விட்டுவெளியேற்றப்படுவார். வெளியேற்றத்திற்கான செலவினை அவரை வேலைக்கமர்த்தியவர் ஏற்க வேண்டும். ஓடி வந்து சொந்தமாக தொழில் செய்தால் அவரது செலவிலேயே வெளியேற்றப்படுவார். ஓடி வந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டால் கஃபீல் செலவில் அனுப்பத் தேவையில்லை. அரசே அனுப்ப ஆவண செய்யும்.

17. தொடர்ந்து எந்த காரணமுமின்றி எந்த தகவலும் இன்றி இரு நாட்களுக்கு வேலைக்கு வராமல் இருப்பது கூடாதுஅவ்வாறு வேலைக்கு வராமல் இருக்கும் தொழிலாளியைப் பற்றி உடன் ஜவஸாத்தில் அவருடைய கஃபீல்ஃநிறுவனம் புகார் செய்ய வேண்டும்.

மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்இரண்டாம் முறை – SR 2000அபராதம்மூன்றாம் முறை – SR 3000 அபராதம்.....






ஒவ்வொருவருக்கும் உங்கள் 
இறைவன் அவர்களின் 
செயல்களுக்கான
கூலிகளை முழுமையாக
 வழங்குவான்
                                                       [அல்-குர்ஆன் 11:111]




மேலே உள்ளது மெயிலில் வந்தது சிலருக்கு பயன்படலாம். 


Monday, April 8, 2013

மட்டன் பார்பிகியு (கீரின் மசாலா) - Mutton BBQ Green Masala







இது துபாயில் விடுமுறை நாட்களில் பார்க்குகளில் எங்கு பார்த்தாலும் பார்பிகியு  மட்டன் கபாப், சிக்கன் ஃப்ரை, கீமா கபாப்  என்று செய்து சாப்பிடுவார்கள். பார்க் முழுவதும் ஒரே மனமாக இருக்கும்
 இங்கு இந்தியர்களை விட அரபிகள் தான் அதிகமாக இதை விரும்பி பல வகைகளில் செய்வார்கள்.



( முன்பு அடிக்கடி இரண்டு முன்று பேமிலி ஒன்றாக சேர்ந்து போவோம், ஒரு பெருநாளுக்கு வேன் பிடித்து பத்து பேமிலிகள் ஒன்றாக கூட போயிருக்கோம்.அங்கு போய் பிள்ளைகல் இஷ்டம் போல விளையாடுவார்கள். நாங்களும் பார்க்குகளில் பார்பிகியு அடுப்புகள் இருக்கும் இருந்தாலும் நாங்க கிழே படத்தில் உள்ள அடுப்பு இரண்டு  கொண்டு போய் சிக்கன் ஹோல் லெக் ஃப்ரை, மட்டன் கபாப், ஷீக் கபாப் போன்றவை செய்து அனைவரும் ஒன்றாக கூடி சாப்பிட்டு விட்டு, பார்கில் இருக்கும் எல்லோரும் ( ஊஞ்சல், சீ சா )அனைத்திலும் ஏறி விளையாடி விட்டு, அடுத்து  எல்லாரும் சேர்ந்து அரட்டை அடித்து கொண்டு நெருப்பு மூட்டிய அந்த தனலில் கருஞ்சாயா இஞ்சி போட்டு  குடித்து விட்டு ஒரு நாள் பொழுதை கழித்து வருவோம்.) பிள்ளைகள் வளமேற்படிப்பு வர வர இப்ப வெளியில் போவதை நிறுத்தி கொண்டோம்.

இது முன்பு செய்தது, தமிழ் குடும்பம் டாட் காமிலும் பகிர்ந்துள்ளேன்.


தேவையான பொருட்கள்


மட்டன் எலும்பில்லாதது = ஒரு கிலோ
தயிர் ‍= நான்கு மேசை க‌ர‌ண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் = ‍ இரண்டு மேசை கரண்டி
தக்காளி ‍= ஒன்று பெரிய‌து

பச்ச மிள்காய் = ‍ ஐந்து
மிளகு தூள் = முன்று தேக்கரண்டி
மஞ்சள் தூள் = அரை தேக்கரண்டி
உப்பு தூள் = இரண்டு மேசை கரண்டி (அ)(ருசிக்கு)
கொத்து மல்லி தழை ‍= அரை கட்டு (பொடியாக அரிந்தது)
புதினா ‍ = ஒரு மேசைகரண்டி (பொடியாக அரிந்தது)
கருவேப்பிலை = ஒரு மேசைகரண்டி (பொடியாக அரிந்தது)
ஆலிவ் ஆயில் ‍= நான்கு மேசை கரண்டி
ஆவிவ் ஆயில் = சுட தேவையான அளவு
லெமன் ‍= முன்று








செய்முறை



1. தேவையான பொருட்களை ரெடியாக வைக்கவும்.மட்டனை நன்கு கழுவி தண்ணீரை வடிக்கவும், கொத்துமல்லி,புதினா,பச்சமிளகாய், கருவேப்பிலையை நன்கு மண்ணில்லாமல் கழுவி தண்ணீரை வடிக்கவும்.

2.மிக்சியில் கொத்து மல்லி,புதினா,பச்சமிளகாய்,கருவேப்பிலையை அரைத்து அத்துடன் மிளகுதூள் உப்பு தூள்,மஞ்சள் தூளை சேர்க்கவும்.

தக்காளியையும் அரைத்து சேர்க்கவும்.








3.அரைத்த மசாலாக்களுடன் ,தயிர்,மட்டன் ,இஞ்சி பூண்டு ஆகியவற்றை கலக்கவும்.

4.நன்கு கலக்கி ஆலிவ் ஆயிலும் சேர்த்து முன்று மணி நேரம் ஊறவைக்கவும்.







5.ஊறிய கறியை BBQ செய்ய கம்பியில் கோர்க்கவும்.

6.BBQ அடுப்பில் தீ மூட்டி நன்கு நெருப்பானதும் சுடவும்.

7.சிறிது சிறிதாக ஆலிவ் ஆயில் கறியில் விடவும்.

8.திருப்பி போட்டு மறுபடி சிறிது எண்ணை விட்டு நன்கு வேகவிடவும்.






9.நன்கு பொரிந்ததும் எடுக்கவும்.

10.சுவையான மட்டன் BBQ ரெடி.



குறிப்பு
இதற்கு கீரின் மாசாலா, மற்றும் ரெட் மசாலா அவரவர் விருப்பபடி எதுவேண்டுமானாலும் போடலாம்.
இதற்கு தொட்டு கொள்ள குபூஸ்,கார்லிக் சாஸ், சாலட் போன்றவையுடன் சேர்த்து சாப்பிட‌லாம்.


linking to vimitha's Huston Canola  oil Giveaway event

Friday, April 5, 2013

குழந்தைகள் தவழ நிற்க ஆரம்பிக்கும் போது





குழந்தைகள்  எழுந்து நிற்க, .தவழ, நடக்க ஆரம்பிக்கும் போது  அவர்களை  இந்த ஸ்டேஜில் மிகவும் ஜாக்கிரதையா பார்த்து கொள்ளனும்.


நிற்க  நடக்க ஆரம்பிக்கும் போது பெட்டில் குதிப்பது விளையாடுவது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த விஷியம். அந்த நேரத்திலும் அடிபடும்.



பிறந்ததில் இருந்து முன்று மாதம் வரை பிரண்டு படுக்கும் வரை பெட்டில் தனியாக போடலாம். இல்லை பெட்டுக்கு கிழே இரங்கும் இடத்தில் ஒரு திக்கான பிளாங்கெட் கூட போட்டு வைக்கலாம்.

அதற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நகர ஆரம்பிப்பார்கள்.

ஆனால் பிரண்டு படுக்க ஆரம்பித்து தவழும் போது குழந்தை தூங்க தானே செய்கிறது என்று தனியாக விட்டு விட்டு போய்விடாதீர்கள்.

பெட்டில் இருந்து கீழே விழுந்து கண்ட மட்டுக்கும் மண்டை வீங்கி விடும்.

இது எல்லா வீட்டிலும் என்ன தான் நீங்க நல்ல பார்த்து கொண்டாலும்
கை இமைக்கும் நேரத்திற்குள் இப்படி பெட்டில் இருந்து சோபவில் இருந்து கிழே விழுந்துவிடுவார்கள்.

அப்படியே மண்டை வீங்கினால் உடனே அந்த இடத்தை சுற்றி லேசாக விக்ஸ் தடவி விட்டு ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் கட்டி வீங்கிய இடத்தில் வைக்கவும்.

அதே போல் அடிக்கடி வாயில் அடிபட்டு ரத்தம் வரும் அதற்கு ஐஸ் கட்டி தான் எப்போதும் பீரிஜரில் ஐஸ் கட்டிகள் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.
நாம் தேடும் போது ஐஸ் கட்டி கிடைக்காது..

இது எல்லா வீட்டு பிள்ளைகளும் தவழ ஆரம்பிக்கும் போது இப்படி அடி படுவதுண்டு,

இன்னும் உங்களுக்கு தெரிந்த டிப்ஸ்களை (அனுபவ சாலிகள், ஸாதிகா அக்கா, கோமதி அக்கா, மனோ அக்கா எல்லாம் இந்த பதிவின் கீழ் சொன்னால் இதை படிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.
இது முன்பே போட்ட பதிவு தான் , தமிழ் குடும்பத்திலும் வெளி வந்துள்ளது/

Monday, April 1, 2013

அத்திபழ மில்க் ஷேக் - Fig Milk Shake



கோடை ஆரம்பித்து விட்டது சாப்பாடை விட ஒரு டம்ளர் ஜுஸ் அல்லது மோர் குடித்தால் சோர்வில்லாமல் இருக்கும்.



  அத்தி பழம் உயர் இரத்த அழுத்த்தை கட்டு படுத்தும். ஹிமோகுளோபின் அளவையும் அதிரிக்கவைக்கும்

அத்திபழ மில்க் ஷேக்
தேவையான பொருட்கள்
பழுத்த அத்திபழம் – 9
காய்ச்சி ஆறிய பால் – அரை லிட்டர்
சர்க்கரை – தேவைக்கு
ஐஸ் கட்டிகள் – 10
செய்முறை
1.       அத்தி பழம் உயர் இரத்த அழுத்த்தை கட்டு படுத்தும். ஹிமோகுளோபின் அளவையும் அதிரிக்கவைக்கும்.




2.       அத்தி பழத்தை சுத்தமாக கழுவி இரண்டாக வெட்டி கொள்ளவும்
3.       வெட்டிய பழத்தை தோல் தனியாக வரும் படி உள்ளிருக்கும் பழத்தைமட்டும் ஒரு ஸ்பூனினால் வழித்தெடுக்கவும்.



4.       தேவையான பொருட்கள் அனைத்தையும் தயராக வைக்கவும்.
5.       பாலை காய்ச்சி ஆறவைத்து பிரிட்ஜில் வைக்கவும்.



6.       மிக்சியில் ஐஸ் கட்டிகள், பால் சர்க்கரை,தோல் நீக்கிய அத்தி பழங்கள்
அனைத்தையும் சேர்த்து மிக்சியில் 5 நிமிடம் ஓடவிடவும்
7.       நல்ல நுரைபொங்க மிக்சியில் அடிக்கவும்.
வித்தியாசமான  சுவையில் ரொம்ப சத்தான ஜூஸ் ரெடி.

பரிமாறும் அளவு : 3 நபர்களுக்கு
சமைக்கும் நேரம் : 7 நிமிடம்


போன வருடம் சிகரம் மாத இதழிலும், வல்லமையிலும் வெளியானவை.






Linking to Gayathiri's walk through memory lane, 
Esay 2 prepare 15 minutes @ Aathithiyam, 
vimitha's Hearty N Healthy