Sunday, June 19, 2011

பிரிவின் துயரால்



//என் தந்தையே
இத்தனை வருடம்
எங்களோடு ஒன்றாக இருந்து
இன்று எங்களோடு இல்லாத 
உன் பிரிவின் துயரால் 
நாங்கள் வாடுகிறோம்




உன் நற்குணத்தை
சொல்ல வார்த்தைகள் இல்லை
தாய் சொல்லை தட்டாத
மகனாய்
உடன் பிறப்புகளுக்கு
அன்பான தந்தையாய்
மைத்துனிகளுக்கு பாசமான
சகோதரராய் இருந்தாய்

என் அன்னையை பூவினும்
மேலாக பாதுகாத்தாய்
ஐந்து வைரங்களையும்
ஒரு வைடூரியத்தையும்
அழகாய் பெற்றெடுத்தாய்
மிகவும் கண்ணியமான
முறையில் அனைவரையும்
கரைசேத்தாய்

தனக்கென எதையும்
பதுக்கவில்லை
பல  ஜோடிகளை
அன்பாக பேசி சேர்த்து வைத்தாய்
உற்ற நண்பர்களை
அன்பாய் நேசிப்பாய்

 நான் சோகமாக இருக்கும்
போது குரான் வசனத்தை
எடுத்துரைத்து தெளிவு
படுத்துவாய்
என் மகனுக்கு நல்ல
உபதேசம் செய்தாய்



பொறுமையின் சிகரமாய்
திகழ்ந்தாய்
அதிர்ந்து கூட ஒரு வார்த்தை
பேசியதில்லை
உற்றார் உறவினரை
கண்ணியப்படுத்துவாய்
அப்படி பட்ட என்
தந்தையை பிரிந்து
வாடுகிறோம்//


//என் தந்தையே
இத்தனை வருடம்
எங்களோடு ஒன்றாக இருந்து
இன்று எங்களோடு இல்லாத 
உன் பிரிவின் துயரால் 
நாங்கள் வாடுகிறோம்//


--ஆக்கம்
ஜலீலாகமால்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

டாடி:ஜலீ ஜலீ ஜலீ ஜலீம்ம்மா ,

நான்:என்னங்டாடி , என்னங்டாடி

இனி யார் என்னை இப்படி கூப்பிடுவாங்க./

எப்போதும், முன்பெல்லாம் சிறு வயதில் வல வல ந்னு பேசிகொண்டே இருப்பேன், சிரித்து கொண்டே எல்லாத்தையும் கேட்டுட்டு கொஞ்சம் நேரம் தேய்ந்து போன ரெக்கார்ட ஆஃப் பண்ணு என்று கிண்டல் பண்ணுவார்கள்.
போனவருடம் இதே நாள் என் டாடியிடன் பேசினேன்,   ஜலீ ஜலீ நல்ல இருக்கீயா , அப்படி கேட்டதுமே ரொம்ப நல்ல இருக்கிறேன் என்ற தெம்பு வந்துடும்.ரொம்ப நேரம் பழைய கதைகளை பேசி கொண்டு இருந்தோம்.

எவ்வளவு தான் மனதை கட்டு படுத்தினால் நினைவுகள் டாடிய சுற்றி யே தான் இருக்கு.
ஒரு வேலையும் ஓட மாட்டுங்கிறது.

நான் சோகமா இருக்கும் போது போன் செய்தால் கீழே உள்ள வசனத்தை நினைவு கூறுவார்கள். இப்போதைக்கு என் டாடி சொன்ன இந்த துஆவை ஓதிக்கொள்கிறேன்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
////லா -யுகல்லி ஃபுல்லாஹு நஃப்ஸன் இல்லா உஸ் அஹா லஹா மாகஸபத், வ அலைஹா மக்தஸபத், ரப்பனா லா துஆகிதனா இந்நஸீனா, அவ் அக்தஃனா , ரப்பனா வலா தஹ்மில் அலைனா இஸ்ரன் கமா ஹமல்தஹூ அலல்லதீன மின் கப்லினா, ரப்பனா வலா துஹம்மில்னா மாலா தாகதலனா பிஹி, வ வஃ ஃபு அன்னா, வஃக் ஃபிர்லனா, வர் ஹம்னா அன் த்த மவ்லானா ஃப்ன்சுர்னா அலல் கவ்மில் காஃபிரீன்..///

///அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நிர்பந்திப்பதில்லை. அது தேடிக்கொண்ட நன்மை அதற்கே-( பயனளிக்கும் அவ்வாறே) அது தேடிக்கொண்ட தீமை அதற்கே ( கேடு விளைவிக்கும்)


எங்கள் இறைவனே! நாங்கள் ( எங்கள் கடமைகளைச் செய்ய) மறந்து விட்டாலும், அல்லது ( அதில்) தவறிழைத்து விட்டாலும், ( அதைப் பற்றி) நீ எங்களை (க் குற்றம் ) பிடிககதே!
 எங்கள் இறைவனே ! நீ, எங்கள் மீது ( கடினமான கட்டளைகலை விதித்துப் ) பளுவான சுவையைச் சுமத்திவிடாதே!..
எங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது ( கடினமான கட்டளைகளை) நீ சுமத்தியவாறு - ( சுமத்தாதே !)
எங்கள் இறைவனே! நாங்கள் தாங்க முடியாத கஷ்டங்களை எங்கள் மீதுசுமத்திவிடாதே!எங்கள் குற்றங்களை மன்னிப்பாயாக!
எங்களை பொறுப்பாயாக!எங்கள் மீது கருனை புரிவாயாக! நீ தான் எங்கள் இரட்சகன்! ஆகவே. ( என்னை) நிராகரிகும் ஜனங்கள் மீது (வெற்றி பெற ) நீ எங்களுக்கு உதவி புரிவாயாக! என்று பிராத்திப்பீர்களாக!)
 குர் ஆன் , 2: 286/////

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
”அன்று நீ “ அஸ்மாவின் இடுகையையும், சகோதரர ஆஷிக்கின்  வல்லையில், ஹாஜாவின் இடுகை // மரணம் முதல் மண்ணறை வரை என்ற இடுகையையும்  படித்தேன் என்னை நான் தேற்றி கொண்டேன்/இருந்தாலும் எங்களால் முடியல .

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நீங்கள் முன் சென்றவர்களாக இருக்கீறீர்கள் நாங்கள் பின்வருகிறவர்களாக இருக்கிறோம், ஆண்டவன் அனை வரின் பாவத்தையும் மன்னிப்பானாக ஆமீன்!


இதெல்லாம் படித்து தேற்றினாலும் மறுபடி நினைவெல்லாம் வாப்பாவையே தான் என்னுது,

.உலகில் உள்ள அனைத்து தந்தைமார்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்