Saturday, April 30, 2011

அன்னு, பெண் எழுத்து

1.அன்னு


அன்னு என் இனிய தமிழ் மக்களே என்ற வலை பூ மற்றும் தாய்தரும்கல்வி பயனுள்ள பதிவுகளை எழுதும் அன்பான தோழி/

இது எனக்காக அவங்க கொடுத்தது. ரொம்ப நன்றி அன்னு,கொடுத்து ரொம்ப நாள் ஆச்சு. ஆனால் பதிவில் அவஙக்ள பற்றி எழுதி போடனும் என்று நாட்கள் கடந்து விட்டது. எதுக்கு என்று கொடுத்தாங்க என்று கேட்கீறீஙக்ளா ,முதல இந்த பதிவுகள்
தாய்மை எனப்படுவது யாதெனில் 4 பாகத்தையும் படிங்க.



நான் ஒன்றும் உபகாரம் செய்யவில்லை எனக்கு தெரிந்த டிப்ஸ் களை வழங்கினேன். 
@@@@@@@@@@@@@@@@%%%%%%%%%%%%%%%%%%%@@@@@@@@@@@@@

2. பெண் எழுத்து தொடர்பதிவுக்கு , பேபி அதிரா, அஸ்மா என்னை அழைத்து இருந்தாங்க,, எல்ல்லாரும் எழுதி இந்த பதிவுகளையே மற்ந்து அடுத்த தொடர்பதிவு ஓடி கொண்டு இருக்க்கானு தெரியல.இந்த தொடர்பதிவ நான் தான் கடைசியா எழுதுறேன்னு நினைக்கிறேன்.இது மார்ச் மாத தொடர்பதிவு ,இந்த மாதத்துக்குள் எப்படியாவது முடித்து விடவேண்டும் என்று சுருக்கமாக எழுதிவிடுகிறேன். 


கேரள பத்திரிக்கை துறையில் முத்திரை பதித்திருக்கும் பெண் எழுத்தாளர் டாக்டர் கமலாதாஸ் கடந்த 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் நாள் அன்று தாம் இஸ்லாத்தில் இணைந்து விட்டதாக உலகுக்கு அறிவித்தார். அத்தோடு தமக்கு ஸுரையா என்று புதிய பெயரைச் சூட்டிக் கொண்டதாகவும் பிரகடனப்படுத்தினார் இவரை பற்றி இங்கு சென்று தெரிந்து கொள்ளுஙக்ள்.
நதியலையில் புதிய பெண் எழுத்தாளர்களின் அறிமுகம்.இங்கு சென்று படித்து கொள்ளலாம்.
பெண் எழுத்து பற்றி நான் என்ன சொல்வது, கவிதை, கதை , கட்டுரைகள் எழுதும் பல பெண்கள் மத்தியில் நான் எழுதுவது ஒன்றும் இல்லை. 
பல பயனுள்ள விடயங்களை சரியான பதிவாக போட்டு கலக்கும் ஸாதிகா அக்கா, எதர்த்த வாழ்கை நிலைய உணர்வுகளின் ஓசையாய் பிரதிபலித்திருக்கும் அன்புடன் மலிக்கா எனக்கு மிகவும் பிடித்த தோழி 
(முகவரியை தொலைக்கும் மொட்டுகள்,  , 20 வருடங்களுக்கு முன்பே பல உண்மை கதைகள் பிரபல பத்திரிக்கைகளில் எழுதிய மனோ அக்கா, விழிப்புணர்வு பதிவுகளை தெரியாக பகிர்ந்து கொள்ளும் அஸ்மா, எல்லா விழியங்களை கடைந்தெடுத்து தெளிவாக பகிர்ந்து கொள்ளும் ஹுஸைனாம்மா,வீட்டில் பேசுவதோ உருது மொழி , தமிழை நன்கு கற்று வலையிலும் அருமையாக வடிவாக பயந்த்ரும் புதுபுது தகவல்களை பகிர்ந்து கொள்ளும் அன்னு எந்த பதிவானாலும் நல்ல உள்கருத்துடன், பூஸாரை வைத்து நகைச்சுவையாகவும், தத்துவமாகவும்,கதை கவிதைகள் எழுதும் அதிரா ,பல உண்மை கவிதை கதை ஆசியா ,புதுமண தம்பதிகளுக்காக அழகாக தொகுத்து எழுதும் கவுசல்யா, இவர்கள் மத்தியில் என் எழுத்து சாதராணமாக தான் எனக்கு தெரியுது.

ஒன்லி சமையல் குறிப்பு ,டிப்ஸ்,குழந்தை வளர்பு இது போல் தான் போட்டு வருகிறேன்.உண்மை சம்பவங்களின் பல கதைகள் இருக்கின்றன , போன வருடம் ஒன்று எழுதவும் செய்தேன், ஆனால் எடுத்துவிட்டேன். பல உண்மை சம்பவங்கள் கொண்ட கதைகள் மனதில் ஓடி கொண்டு தான் இருக்கிறது ஆனால் எழுத தோது நேரம் கிடைக்கல .இப்ப வலையுலகில் அவார்டுக்காக என் பக்கம் வந்து பெண்களை எல்லாம் நினைவு கூர்ந்து பெயர் எழுதும் போது தான் இத்தனை பெண்களா வலையுலகில் எழுதி கொண்டு இருக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது.

நான் இந்த பிளாக்(வலையுலகம்) வந்து இந்த முன்று வருடத்திற்குள் ஏனைய பெண்களின் எழுத்து அதிகரித்து உள்ளது. பெண்கள் சுதந்திரமாக தைரியமாக அவரவர் வலைகளில் பல கருத்துகளை எழுத்துகள் மூலம் பகிர்ந்து கொள்கின்றனர், ஏற்று கொள்ள முடியாத சிலர் அவர்களை எழுத விடாமல் எவ்வள்வு சிக்கல் கொடுக்கமுடியுமோ அவ்வளவு சிக்கல் இடையூறுகள் கொடுத்து கொண்டு இருக்கின்றனர்.
ஆனால் என்ன தான் பெண்கள் எழுதினாலும் பிரபலமானால் சிலருக்கு பொறாமை வந்துடும் போல எப்படி கீழே போட்டு மிதிக்கலாம் என்று காண்டு பிடிச்ச அனானியாக வ்ந்து தேவையில்லாத குழப்பமான கமெண்டுகளை போட்டு கிளப்பி விடுவது, இதுபோல் எழுத விடாமல் செய்கின்றனர்..
இப்போது யாரும் பயபடுவதாக இல்லை யார் என்ன சொன்னாலும் தூசி தட்டி விட்டு பெண் எழுத்துக்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.


@@@@@@@@@@@@@@@@@@@@%%%%%%%%%%%%@@@@@@@@@@@@@

3. அவார்டு .அன்பு தோழி,சினேகிதி பாயிஜா எனக்கு கொடுத்த அவார்டு,தமிழ் குடும்ப தோழி, அருசுவை தோழி, வலை உலக தோழி பாயிஜா எனக்கு கொடுத்த அவார்டு.மிக்க நன்றி சினேகிதி.


ஹே ஹே இப்ப அனானிக்கு மூக்கு வேர்க்குமே./
 என்ன செய்வது தோழிகள் அன்பாக கொடுக்கும் போது வாங்கிக்கதா வேனும்.

@@@@@@@@@@@@@@@@@@@@%%%%%%%%%%%%%%@@@@@@@@@@0

டிஸ்கி: ஏற்கன்வே என் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாதது எல்லோருக்கும் தெரியும்,ஒரு மாதம் மேல் ஆகுது இன்னும் சரியாகல ஆகையால் மனவேதனையாக இருக்கு அதான் என் பதிவுகள் வரல, ஏற்கன்வே பாதி போட்டு வைத்திருந்த பதிவு இது அதான் முடித்தேன்.

ஒரு நாளைக்கு ஒன்றிரண்டு கமெண்டாவ்து வந்தாதான், என்னை யும் ஞ்பாகம் வைத்து இருக்கீங்கன்னு ஒரு திருப்தி, இப்ப என் டிப்ஸ், குழந்தை வளர்ப்பை பல பேர் பார்வையிட்டு கொண்டு இருக்கீங்க ஏதாவது கருத்தையும் தெரிவிக்கலாமே.

என் பிலாக் இப்ப போடும் பதிவுகள் இரண்டிரண்டாக தெரியுது எனக்கு இப்ப சரி செய்ய நேரம் இல்லை. கொஞ்சம் பொருத்து கொண்டு படித்து கொள்ளுங்கள் பிறகு பார்க்கிறேன். 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அடுத்து வலை உலகில் தோழ தோழியர்கள் கழடப்பட்டு எழுதுவத நோகாம நோன்பு கும்பிடுவாங்களே அது போல் இங்க ஒருத்தங்க நோன்பு கும்பிடுறாஙக் பாருங்கள்.காப்பி பேஸ்ட் பிலாக்.இன்னும் பல லின்குகள் இருக்கு இது போல் வலை யே திருடி அவங்க சொந்த வலையாக்கி பொழப்பு நடத்துறா (- னு -ளு) ங்க,

Sunday, April 24, 2011

ஓமம், கருஞ்சீரக குஜராத்தி ஆட்டா பூரி - ajwan,nigella seed gujarati puri


-- 

AJWAIN NIJELLA SEED PURI

குஜராத்தி ஆட்டா -  அரை கிலோ

தேவையானவை

கருஞ்சீரகம், ஓமம், - தலா ஒரு ஸ்பூன்
மிளகு தூள் - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் -  அரை ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
சர்க்கரை - ஒரு ஸ்பூன்
எண்ணை - 2 மேசை கரண்டி
தண்ணீர் -  200 மில்லி ( தேவைக்கு)

எண்ணை பொரிக்க தேவையான அளவு

செய்முறை

கருஞ்சீரகம், ஓமம், மிளகு லேசாக வறுத்து, மாவில் கலக்கவும்.
மேலும் உப்பு மஞ்சள் தூள்,சர்க்கரை, எண்ணை கலந்து தேவைக்கு தண்ணீர் சிறிது சிறிதாக விட்டு மாவை நன்கு பிசையவும்.பிசந்த மாவை 1 மணி நேரம் ஊறவிடவும்.

ஊறிய மாவை சிறிய உருண்டைகளாக போட்டு பூரிகளாக இட்டு சுட்டு எடுக்கவும்.

சுவையான மருத்துவ குணமுள்ள பூரி ரெடி, தொட்டு கொள்ள வெஜிடேபுள் பாஜியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.


இருமல் சளி தொல்லைக்கு இது போல் அடிக்கடி சப்பாத்தி, ரொட்டி, பூரி செய்வதுண்டு

டிஸ்கி: இங்குள்ள மில்லில் வகை வகையான மாவு வகைகள் கிடைக்கின்றன,
ராகி,கம்பு, ஜோவர்(தினை)குஜராத்தி ஆட்டா, பஞ்சாபி ஆட்டா, டயட் ஆட்டா, கோதுமை மாவு, போன்ற பல வகை, மில் போய் வாங்கினா எல்லா வகை மாவும் மொத்தமா வாங்கி வந்துடுவேன், அதில் குஜராத்தி ஆட்டாவில் ஓமம் , கருஞ்சீரகம் சேர்த்து இந்த பூரியை செய்துள்ளேன்.

சென்னை ஃப்ளாசாவுக்கு வாங்க

Thursday, April 21, 2011

ஒரே அவார்டு மேல அவார்டு தான், இங்க வாங்க தோழிகளே

kichen tantra malar gandhi  என் பதிவுக்கு தொடர்ந்து வருகை புரியும்(அழகிய) மலர் கொடுத்தது.

Monday, April 18, 2011

ஆளி விதை ஓட்ஸ் ரொட்டி - FLAX SEED OATS ROTTI


ஃப்லக்ஸ் சீட் இது நான் இப்ப தான் முதல் முதலா கேள்வி படுறேன், இங்கு ஒருவர், இந்த ஒரு பாக்கெட் கொண்டு வந்து மிக்ஸி இல்லை பொடித்து கொடுங்க என்றார், என்ன வெள்ளை எள் போல இருக்கே என்னது இது என்றேன்,

தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவு கரைத்து குடிக்கனும் என்றார்.
இது இதில் சத்து அதிகம் ஒமேகா3 இருக்கு,

Saturday, April 16, 2011

ஹோம் மேட் பாஸ்தா - கோடா - homemade pasta - koda




கோடா என்பது சேமியா, மக்ரூனி, பாஸ்தா போல் வீட்டில் தயார் செய்வது கோடா என்பது வீட்டில் தயார் செய்வது. தயாரிக்கும் முறை. ஒரு கிலோ மைதா (அ) கோதுமை மாவை எடுத்து சிறிது உப்பு சேர்த்து பரோட்டாவிற்கு பிசைவது போல் சிறிது தளர்த்தியாக பிசைந்து உருண்டைகளாக போட்டு நல்ல மாவு தேய்த்து மெல்லியதாக திரட்டி ஒரு பேப்பரில் வெயிலில் காயவைக்கவும். இரண்டு பக்கமும் காய்ந்ததும் அதை குறுக்கும் நெடுக்குமாய் டைமண்ட் ஷேப்பில் கஜுருக்கு

Thursday, April 14, 2011

சென்னை ஃப்ளாசாவுக்கு வாங்க வாங்க எல்லோரும் வாங்க -chennai plaza

Wednesday, April 13, 2011

அன்பான அப்சாரா தோழி கொடுத்த அவார்டு


அப்சாரா வின் இது அப்சாராவின் இல்லம் என்னும் வலை பூ எழுது அப்சாரா அருமையான கருவுள்ள கதைகள் நிறைய எழுதி இருக்காங்க.
இது வரை சந்தித்ததில்லை ஆனால் போனில் அடிக்கடி பேசி விசாரித்து அவங்க அன்பை நானும் என் அன்பை அவர்களும் பெற்று கொண்டார்கள்.

Tuesday, April 12, 2011

சிக்கன் பஜ்ஜி - chicken bajji



தேவையானவை

போன்லெஸ் சிக்கன் - கால் கிலோ
மிளகாய் தூள் - முக்கால் தேக்கரண்டி
உப்பு -தேவைக்கு
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
லெமன் சாறு - அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி
சோயா சாஸ் - அரை தேக்கரண்டி
பஜ்ஜி மாவு கலக்க

Thursday, April 7, 2011

தில் கீரை ஃபிலாஃபில் சாண்ட்விச்,குபூஸ் - dil leaves filafil sandwich, kuboos







ஃபிலாபில் மெயினாக எஜிப்ஷியன், லெபனீஸ் ஸ்னாக்ஸ், அரபிகளின் பிரசத்தி பெற்ற உணவுகளில் ஒன்றும் கூட.நம்ம ஊர் பாஷையில் கொண்டை கடலை வடை
இதை நான் பலமுறை இந்தியன் டைப்பிலும் அரபிக் டைப்பிலும் செய்து விட்டேன், சாதாரன மசால் வடைய விட மொரு மொருப்பு அதிகமாக இருக்கும்.


ஹமூஸ் இது அரபு நாடுகளில்

Tuesday, April 5, 2011

என்னத்த சொல்வது


எல்லாம் எப்படி இருக்கீஙக் நலமா? இந்தமாதம் நான் ஊருக்கு போய்விட்டேன். எல்லாம் திடீர் திடீர் தான், என்னாடா இது பதிவு மட்டும் வருதே பதில் வரலையேன்னு நினைத்து இருப்பீங்க.

அப்பாவுக்கு தீடீருன்னு நடக்க முடியாம போச்சு, அதான் உடனே ஊருக்கு போய் விட்டேன்.

சவுதியில் 2003 யில் பத்து வருடம் வேலை பார்த்தார் அங்கு ஆயில் தடுக்கி ஸ்டோரில் கீழே விழுந்ததால் இடுப்பு எலும்பு முறிந்து விட்டது, ஸ்டீல் வைத்து ஆப்ரேஷன் செய்து சரியாகிவிட்டது. நல்ல நடக்க ஆரம்பித்து விட்டார்.

Sunday, April 3, 2011

Cricket Fever




THIS is the season of Cricket... 

Enjoy.......






மெயிலில் வந்த படங்கள் யாரும் பிலாக்குல கல்ல தூக்கி போட்டுடாதீங்க