Monday, February 28, 2011

வேப்பிலை இஞ்சி - குழந்தைகளின் வயிற்று பூச்சி அழிய,தினகரன், கீற்று



நான் அறுசுவையில் முன்பு கொடுத்த15.01.2009 nil  வேப்பிலை இஞ்சி தினகரனில்  15.12.2009 நில் போட்டு இருக்காங்க பாருங்க. இப்படி பிரபல பேப்பரில் சமையல் குறிப்பு அனுப்புகிறவர்களை விசாரித்து போட மாட்டார்கள் போல, பிரபலமான பேப்பர், நல்ல சமையல் கலை நிபுனர்களின் அனுமதியோடு போடலாமே. எந்த லூஸு திருடி அனுப்புதுன்னு தெரியல. திருடிய லூஸு என் பெயருடன் போட்டு இருந்தா  கொஞ்சம் திருப்திஅடையலாம்.


இங்கும் போய் பாருங்கள் காப்பி அடிச்சிட்டானுங்க திருந்தாத ஜென்மஙக்ள்


போன வாரம் இதை செய்து விட்டு பதிவு போடலாம் என்று வரும் போது தற்செய்லா தினகரன் பேப்பர செக் பண்ணும் போது இதுவும் அங்கு இருக்கு. இப்ப இந்த குறிப்ப போட்டா, அங்கிருந்து நான் காப்பி அடித்தமாதிரி இல்ல இருக்கும் சே சே ,,,

இது என் மாமியாரின் கை வைத்தியம்

இதில் எழுதியுள்ள டிப்ஸ் , 80% என்னுடைய சொந்த அனுபவ கருத்து 20 % மாமியார் சொன்னது.

.
குழந்தை வளர்பு டிப்ஸ், குழந்தைகளில் வயிற்றில் உள்ள பூச்சி அழிய/

குழந்தைகள் பால், சாக்லேட், இனிப்பு வகைகள் சாப்பிடுவதாலும். மண்ணில் கீழே கையை வைத்து விளையாடுவதாலும் வயிற்றில் பூச்சிகள் இருக்கும் , பூச்சி இருப்பதை எப்படி கண்டு பிடிப்பது, முகத்தில் ஆங்காங்கே தேமல் இருந்தால் , சாப்பாடு சரியாக உட்கொள்ளமல் இருந்தால் கண்டிப்பாக பூச்சி வயிற்றில் இருக்கும்.

அதற்கு 6 மாதம் ஒரு முறை பூச்சி மருந்து டாக்டரிம் காண்பித்து கொடுப்பது நல்லது,
இதே இயற்கை உணவு முறையிலும் நாம் இதை வெளியேற்றலாம், குழந்தைகள் என்றில்லை, பெரியவர்களும் எல்லாருக்குமே இந்த மருந்து `மிகவும் உகந்தது.

இது என் இரண்டாம் முறை தயாரிப்பு செய்முறை - 2




தேவையானவை

இஞ்சி - 100 கிராம்
வேப்பிலை - ஆய்ந்து கழுவியது கைக்கு ஒரு கைப்பிடி
தேன் தேவைக்கு
உப்பு - ஒரு சிட்டிக்கை
சர்க்கரை சிறிது

செய்முறை

வேப்பிலையையும் , இஞ்சியை தோல் நீக்கி பொடியாக அரிந்து சுத்தம் செய்த வேப்பிலையுடன் சேர்த்து உப்பும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
அரைத்து டீ வடிகட்டியில் பிழிந்து வடிகட்டவும்.

வடித்த ஜூஸை அப்படியே 15 நிமிடம் வைக்கவும், அடியில் நஞ்சு தங்கி இருக்கும், மேலோடு தெளிந்த சாறை மட்டும் எடுத்து கசப்பு தெரியாமல் இருக்க தேவைக்கு தேன் கலந்து குடிக்கவும்.

குறிப்பு

ஆறு முதல் 9 மாத குழந்தைகளுக்கு அதிக இனிப்பு சாப்பிட வாய்ப்பு இருக்காது தேவைபட்டால் படத்தில் காட்டியுள்ள சங்கில் அரை சங்கு ஊற்றலாம்

9 முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 1 சங்கு முழுவதும் கொடுக்கலாம்
அதற்கு மேற்பட்ட வயது மற்றும் பெரியவர்கள் 2 , 3 சங்கு (அ) கால் டம்ளர் குடிக்கலாம். சிறியவர்களுக்கு தேன் நன்றாக கலந்து கொள்ளவும்.

பெரியவர்கள் அவ்வளவா தேவையில்ல மூக்க மூடிட்டு பல்லுல படமா முழுங்கிடுங்க..

இப்படி சாறு எடுக்க முடியாதவர்கள் வேப்பில்லையை பொடித்து வைத்து சுக்குதூள் கிடைக்குது அதையும் வாங்கி கலந்து தேன் கலந்து குடிக்கலாம் ,

( மேலும் இது சர்க்கரை வியாதியையும் கட்டுப்படுத்தும், உடலில் ரத்தத்தில் அள்வு கம்மியாக இருந்தால் அதை அதிகரிக்கவும் வேப்பிலை அருமருந்து)


ஆறுமாதம் என்றில்லை அடிக்கடி இதை செய்து குடிக்கலாம்.
அதே போல் பூப்பெய்திய பெண்களுக்கு வரும் வயிறு உபாதைகளுக்கு இது சிறந்த மருந்து.

அபார்ஷன் ஆகி கட்டி தங்கி விட்டால் கூட இதை இரண்டு முன்று முறை குடித்து விட்டு கருதரித்தால் மிகவும் நல்லது.வயிற்றில் மீதி தங்கிய அழுக்குகளும் வெளியாகிடும்.

2 மாதம் , முன்றுமாதம் (அ) கர்பிணிபெண்கள் சாப்பிடவேண்டாம்.

கர்ப்பம் தரிக்கும் முன், (அ) குழந்தை பெற்ற பிறகு இதை அடிக்கடி செய்து குடிக்கலாம்.



  • மற்றொரு முறை 

    இது என் தங்கை பசீரா செய்வது

    இஞ்சி சாறு தனியாக எடுத்து நஞ்சு எடுத்து வடித்து வைக்கவும்.
    வேப்பிலையை தனியாக அரைத்து சாறு எடுக்கவும்.
    இரண்டையும் கலந்து தேன் ,உப்பு, சர்க்கரை சேர்த்து கொடுக்கவும்

    இஞ்சி சாறு முறையை இங்கு சென்று பார்க்கவும்.


டிஸ்கி : கொஞ்ச நாள் பதிவு போடுவதை நிறுத்திட்டு இப்படி செக் பண்ண இனையம் மூலம் சம்பாதிக்க, சில பேர் நானும் வெப்சைட் ஆரம்பிக்கிரேன்னு ஆரம்பிச்சிட்டு பழியா ஓவ்வொரு இடமா போய் களவெடுத்து போடுகிறார்கள்.

தோழி சுந்தராவின் கவிதை  கீற்று.காமில் வெளியாகி உள்ளது வாழ்த்து தெரிவிக்க அங்கு போனா ச்மையல் பகுதிய கிளிக் செய்தால்
 என் ஆம்பூர் பிரியாணிய அட்டு காப்பி, இன்னும் என்ன என்னன்னு செக் பண்ணா பீபீ எகிறிடும் போல. இதுபோல் ஆளாளாக்கு செய்தால் குறிப்பு போடவே பிடிக்கல, சில பேருக்கு உத்வுதேன்னு போட்டா இந்த களவாணி பசங்கள என்ன செய்வது,
கிற்று இங்க போய் பார்க்கவும், எனக்கு தெரிந்து அங்குள்ள சமையல் குறீப்புகள் எல்லாமே காப்பிஅடிக்கப்பட்டவைதான். 









Sunday, February 27, 2011

அமீரக பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய விழா, புத்தக வெளியிட்டு விழா





அமீரக பண்ணாட்டு இஸ்லாமிய கழகம் நடத்திய இலக்கிய விழா மற்றும் நடந்து முடிந்த இஸ்லாமிய இலக்கியத்தைப் பற்றிய கட்டுரை போட்டிக்கான பரிசளிப்பு விழா, கொழும்பு தமிழ்சங்க தலைவர் திரு.ஜின்னா சர்புதீன் அவர்களின் “தீரன் திப்பு சுல்தான் காவியம்” மற்றும் நம் (என் அன்பு வலை உலக ) தோழி”நீரோடை மலிக்காவின் உணர்வுகளின் ஓசை “ புத்தக வெளியீடு மற்றும் கீழை சீனா தானா அவர்களின் “நான் விரும்பும் துரு குர் ஆன்” விளக்கமும் நீதியும் கேசட் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.








நுழைந்ததும் எங்க ஆபிஸ் பேனர், ஒரே சந்தோஷம் தான்

மலிக்கா கண்டிப்பாக வரனும் என்று முதலே மெயில் மூலமாகவும், போனிலும் சொன்னார்கள்,இது வரை எந்த மன்றத்துக்கோ , சங்கத்துக்கோ நான் சென்றதில்லை, காரணம் நானும் பெரிய ஆணி சின்ன ஆணியெல்லாம் பிடிங்கி கொண்டுதான் இருக்கேன். பிள்ளைகள் படிப்பு, விருந்தினர் வருகை வெள்ளி ஒரு நாள் தான் எனக்கு விடுமுறை அதிலும் வெளியில் செல்ல அவ்வளவாக விரும்புவதில்லை.


கடைசியில் யாருடன் போவது எல்லாம் நம் தோழிகள் எல்லாம் வருகிறார்களா என்று கேட்டேன் ஹுஸைனாம்மா வருவாஙக் இன்னும் சில தோழிகள் என்றார்கள்,  அப்சாரா இல்லம் என்னும் வலை பூவை எழுதும் தோழி தான் என்னையும் மலிக்காவையும் எப்படியாவது சந்திக்கனும் என்று விரும்பினார்கள் , உடனே அப்சாராவிற்கு போன் செய்து வரும் படி சொன்னேன் அவர்களுக்கு மிகவும் ஆசையாக இருந்தாலும், பையனுக்கு மறுநாள் தேர்வு இருக்கு அதுக்கு அவனை ரெடி பண்ணனும் , வேண்டுமானால் 10 நிமிடம் வந்து உங்கள் இருவரையும் பார்த்து விட்டு செல்கீறேன் என்றார்கள், சரி , மதியம் சாப்பாட்டு வேலை முடிந்தது,


 ஆசியா உடைய பரங்கி பேட்டை பிரியாணி, என் கிரிஸ்பி சிக்கன் பிரை, தயிர் பச்சடி செய்து சாப்பிட்டாச்சு.அப்படியே மலிக்காவுக்கு ஒரு பார்சல் எடுத்து கொண்டேன்.
அடுத்து கிளம்பலாம் என்று இருந்தால் தீடீர் விருந்தாளியாக ஊரிலிருந்து வந்த என் சாச்சி சாச்சா வந்துட்டாங்க , சரி இவர்கள் தான் முக்கியம் அவர்களை கவனித்து விட்டு டீ கடை போண்டா கேசரி, இஞ்சி டீ போட்டு அவர்களுக்கு கொடுத்து வழியனுப்ப மணி 7 ஆகிவிட்டது.கடைசி நேரத்தில்அப்சாராவும் வர இயலவில்லை என்று சொல்லிவிட்டார்கள் இவரும் வர மாட்டேன் சொல்லிட்டார்,யார்கூட போவது, இவர் சொன்னார் சரி வா உன்னை வாசலியே விட்டுட்டு வரேன் , ஒகே உடனே மக்ரீப் தொழுதுட்டு கிளம்பியாச்சு அப்பாடா ,10 நிமிடத்தில் அங்கு போய் சேர்ந்தாச்சு ,மலிக்காவிற்கு போன் அடித்தேன் ஒரே சந்தோஷம், பஸ்ட் புலோருக்கு வாஙக் என்றார்கள், போய் நுழைந்ததும் எங்க ஆபிஸ் பேனர் ஓ இங்க தான் உள்ளே போனோம் பின்னாடியே வரமாட்டேன்னு சொன்ன ஹஸ்ஸும் வந்து விட்டார், அப்பாடா திரும்பி போகும் போது யாரையும் தேடதேவையில்லை..போனதும் மலிக்கா பக்கத்தில் சீட்ட போட்டு வரவேற்று உட்கார வைத்தார்கள். 



ஈடிஏ எம் டி சலாவுதின் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.அவரும் அருமையான முறையில் சிறப்புறை ஆற்றினார்
நிகழ்சிகள் ஒவ்வொன்றாக ஆரம்பித்தன 

,காவிய திலகம் ஜின்னா சர்புதீன் அவர்களின் தீரன் திப்பு சுல்தான் புத்தகத்தை வெளியிட்டார்கள், அடுத்து  கீழை சீனா தானா அவர்களின் “நான் விரும்பும் துரு குர் ஆன்” விளக்கமும் நீதியும் கேசட் வெளியிட்டார்கள். 
இடையில் பிஸ்கேட், சமோசா, டீ வந்தது, எல்லாம் சாப்பிட்டாச்சு, அடுத்து 9 மணிக்கு மலிக்காவின் புத்தக வெளியிடு பார்க்கவே ரொம்ப சந்தோஷமாக இருந்தது, 



இது நம் மலிக்க்காவின் புத்தகம் உடனே புரட்டி பார்த்தேன் ஆஹா தலைப்பே பிரமாதம், “உணர்வுகளின் ஓசை”  மிக அருமையான முறையில் தொகுத்து எழுதி இருகிறங்க நம் தோழி மலிக்கா.
கடைசியாக இலக்கிய போட்டி பரிசளிப்பு விழா அதை தான் பார்க்க முடியவில்லை. 
ஆண்கள் பதிவர்கள் நிறைய பேர் வந்திருப்பதாக சொன்னார்கள் யார் யார் வந்தார்கள் என்று தெரியல, மீதி போட்டோக்கள் பதிவுகள் மலிக்கா விபரமாக போடுவார்கள் பாருங்கள்.


அன்று மாலை இனிமையாக கழிந்தது, விழா முடிய 11 மணிக்கு மேல ஆகியதாம் , நான் பையன் வீட்டில் தனியாக இருப்பதால் 9.30 க்கெல்லாம் கிளம்பி விட்டேன்.



.





.

டாக்டர். ஜின்னாஹ் ஷரீபுத்தீன் துணைத் தலைவர், கொழும்புத் தமிழ்சங்கம்
டாக்டர்.சேமுமு. முகமதலி
பொதுச் செயலாளர், பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் தலைமையகம் - சென்னை
கவிச்சித்தர்.மு.மேத்தா
கலாபூஷணம்.மானா மக்கீன் எழுத்தாளர்-இலங்கை

இசையரசி. நூர்ஜஹான் இஸ்லாமியப் பாடகி -இலங்கை



இஸ்லாமிய பாடகி இலங்கை இசை அரசி நூர்ஜஹான் அவர்களின் பாடல் காதுக்கு இனிமையாக இருந்தது.

இந்த விழாசிறப்பாக நடக்க உதவிய பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழக உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டக்கள். 


.

நிற்பவர்களில் இரண்டாவதாக நிற்பவர் அதிரை சர்புதீன் அவர்கள், 5 வருடம் முன் நான் வலை உலகில் குறிப்பு கொடுக்க ஆரம்பிக்கும் முன் துபாயில் வெளி வந்த தென்றல் புத்தகத்துக்கு ஏதாவது கட்டுரை எழுதி கொடுக்குமாறு கேட்ட போது எனக்கு சமையல் குறிப்பு தான் கொடுக்க தோன்றியது பூண்டு கோழியும் , பீட்ரூட் ஹல்வாவும் 2005 தென்றல் மாத இதழுக்கு எழுதி கொடுத்தேன்.
ஐந்து வருடம் முன் பார்த்தது, அதோடு இப்ப தான் அவரை பார்த்தேன், அவரால் தான் குறிப்பு கொடுக்க ஆரம்பித்தேன், பயந்து பயந்து நலல் வரனுமேன்னு ஒரு பேப்பரில் தான் எழுதி கொடுத்தேன்.இதில் என்னை பற்றி குறிப்பிடனும் நினைக்கல அங்கு அதிரை சர்புதீன் அவர்களை கண்டதால் அவருக்கு நன்றி சொல்லும் வீதம் இங்கு பகிர்ந்து கொண்டேன்.


தென்றல் இதழில் குறிப்பு கொடுக்க ஆரம்பித்த பிறகு தான் அறுசுவைடாட்காம்யில் சமையல் குறிப்பு கொடுக்க ஆரம்பித்தேன் .அதன் பிறகு தமிழ்குடும்பம்டாட்காம்,சமையலறைடாட்காம்,என் பிலாக்  சமையல் அட்டகாங்கள் அடுத்து கீழக்கரை அஞ்சல், விகடன் தீபாவளி மலர், லேடீஸ் ஸ்பெஷல் .எல்லாத்துலேயும் என் பதிவுகள். இன்னும் நிறைய பிலாக்குகள், மலேஷியா, அதிரை,இலங்கை போன்ற பிலாக்குகளிலும் என் சம்மதத்துடன் லின்க் கொடுத்து இருக்கிறார்கள். சில இடங்களில் காப்பி அடித்தும் அவர்கள் பதிவு போல் போட்டு வருகிறார்கள், என் பதிவுகள் எல்லோருக்கும் பயனளிப்பதில் மிகுந்த சந்தோஷம்.

எனக்கு முதலாவதாக ஊக்கமளித்த சர்புதீன் அவர்களுக்கு மிக்க நன்றி.











Monday, February 21, 2011

பைனாப்பிள் கேசரி, பிளெயின் கேசரி - pineapple kesari

இது என் தங்கை பசீரா செய்த கேசரி, இதில்நெய் அளவு, அதிகம் என்றால் தேவைக்கு குறைத்து கொள்ளுஙக்ள், தங்கை எப்பவாவது விருந்தினர் வரும் போது விஷேசங்களுக்கு என்பதால் சரியான அளவில் தான் செய்வாள், நெய் , சர்க்கரை அளவை குறைத்து கொள்வேன். நட்ஸ் வகைகள் நம் விருப்பம் தான் தேவைக்கு நிறைய சேர்த்து கொள்ளலாம்.

தேவையானவை

ரவை – 100 கிராம்
நெய் – 50 கிராம்
சர்க்கரை – 150 கிராம்

Saturday, February 19, 2011

கேன்சர் கேன்சர் கேன்சர்




கடந்த ஐந்து வருட காலமாக என் காதில் மாதம் ஒருத்தருக்காவது கேன்சர் இருக்கு என்பது காதில் விழுந்து கொண்டே இருக்கு, அதில் சில பேர் சரியான சிகிச்சை, உணவு கட்டுபாடு, தொடர்ந்து கொடுத்த மாத்திரைகளை சரியாக உட்கொண்டு வருவதால் நன்றாக தேறி இருக்கிறார்கள். ஆனால் சில பேர் ( லிவர் மற்றும் தொண்டையில் கேன்சர் வந்தவர்கள் ஏதும் செய்யமுடியாத நிலையில் இறைவனடி சேர்ந்துள்ளனர்

Tuesday, February 15, 2011

சிரிக்க..சிரிக்க.. மட்டும்

1) “செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..
படி.. அல்லது பன்னி மேய்...” --- எங்க பிதாஜி....




2) ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...
மாணவர்கள்: புரியல சார்...

3
) போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.



4) மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.
அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா 


5) மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள். 
மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்? (Tense)
கணவன்: அது ஒரு இறந்த காலம்....

**********************&&&&&&&&&&&&&&&&&&&&&&*****************

11) தேர்வு அறையில்...
மாணவன்: ஆல் தி பெஸ்ட்!
மாணவி: ஆல் தி பெஸ்ட்!
மாணவன் பெயில்.... மாணவி 80%
நீதி: நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்....
(
ஒழுங்கா படிக்க முடியாததுக்கு என்னமா சமாளிக்கிறான்னு பாருங்க....)

12) நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..



 13) முடியாது என்று சொல்பவன் முட்டாள்...
முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...
இப்ப சொல்லுங்க...என் “செல்லுக்கு டாப்-அப் பண்ண

முடியுமா...முடியாதா...?





14) லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்?


லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...

எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்... எப்பூடி?


16) கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற?

மனைவி: பல்லி விழும் பலன்...

கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது?

மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...






17) நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்... அப்போது தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க முயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர் படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்...
இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்.


18) நம்ம சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால் பன்ச் டயலாக் எப்படி இருக்கும்?


* J to the A to the V to the A --- JAVA
கண்ணா... வைரஸ் தான் கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ் சிங்கில்லாத்தான் வரும்.
* C 
க்கு அப்புறம் C++... எனக்கு அப்புறம் NO++


19) வாழ்கையின் முக்கிய ஏழு நிலைகள்.(Stages)
1. 
படிப்பு

2. 
விளையாட்டு
3. 
பொழுது போக்கு
4. 
காதல்
5.
6.
7.

ஹலோ... என்ன தேடுறீங்ககாதல் வந்த பிறகுதான் எல்லாமே நாசமாப் போயிருமே...! 


Monday, February 14, 2011

ப்ரெட் பஜ்ஜி - bread bhajji





இன்று என் செல்ல மகன் ஹனீபுக்கு பிறந்த நாள், பிறந்த நாள் எல்லாம் நாங்கள் கொண்டாடுவதில்லை, (யாரும் சிரிக்காதீங்க) ஹனீஃப் பிறக்கும் முன் வரை காதலர் தினம் என்றைக்கு என்று கூட தெரியாது. பிப்ரவரி 7 திருமண நாள் அன்று தான் டெலிவரி டேட் ஆனால் ஒரு வாரம் தள்ளி பிப்ரவரி 14 அன்று தான் பிறந்தான்.

 அப்ப தான் நர்ஸ் எல்லாம் வாழ்த்து சொன்ன போது ஹே ஹே டுடே வேலண்ட்டைன்ஸ் டே ,வாவ் என்று ஓவ்வொரு நர்ஸ், டாக்டர் எல்லாம் வாழ்த்து தெரிவித்தாங்க அப்ப இருந்த வலியில் எதுவும் காதுல விழல , அப்பரம் தான் ஓவ்வொரு வருடமும் பிப்ரவரி 14 காதலர்கள் தினம் என்று தெரியவந்தது.
பிள்ளைகளுக்கு பிறந்த நாள் என்றால் முதலில் ஸ்கூலுக்கு கலர் டிரெஸ் போடனும், எல்லோருக்கும் சாக்லேட் கொடுக்கனும் என்று தான் ஆசை படுவார்கள், அது போல் வாங்கி கொடுத்தாச்சு, மற்ற பிள்ளைகள்ம் கொடுக்கிறார்களே, ஃபிரென்ஸ்களுக்கு சாக்லேட் கொடுப்பதும், எல்லா ஆசிரியர்களுக்கு கொண்டு போய் சாக்லேட் கொடுப்பதும் அவனுக்கு பெரிய சந்தோஷம்.

அவர் (இனி அவன் கிடையாதாம்) மம்மி 13 இயர்ஸ் ஆகிவிட்டது இனி நான் கிட் கிடையாது, டீனேஜ் என்கிறார்.சரி சரி தவறாமல் தொழுகை ஓதல சரியா கடை பிடி பிறகு தான் எல்லாம் என்றேன்.
பெரிய கொண்டாட்டம் எல்லாம் கிடையாது, பிள்ளைகளின் ஆசைக்கு சின்ன பிள்ளைகளாக இருந்த போது கேக் வெட்ட எல்லாம் ஆசை,இப்ப வேண்டாம் என்று சொல்லிவிட்டான். முதலில் நஃபீல் தொழுகை, அடுத்து ஊரில் மிஸ்கீன் க|ளுக்கு சாப்பாடு அம்மாவிடம் சொல்லி கொடுக்க சொல்லிடுவேன், அடுத்து அவனுக்கு பிடித்தது சமைத்து கொடுப்பேன்,  நான் வைக்கும் சாம்பார் தான் அவனுக்கு ரொம்ப பிடிக்கும் ஆகையால் மதியம் சாம்பார் வடை, இட்லி.

எல்லோரும் துஆ செய்யுங்கள், உங்கள் அனைவரின் அன்பான துஆக்கள் வேண்டும்.

பதிவில் கடைசியாக ஒரு மெசேஜ் போடலாம் என்று நினைத்தால் நேற்றே பதிவுலக தோழி ஏஞ்சலின் வாழ்த்து அட்டை அனுப்பி வாழ்த்தினாங்க,

அடுத்து இன்று பிலாக்கை ஒப்பன் செய்தா இன்ப அதிர்ச்சி, வேலன் சார் வாழ்த்தலாம் வாங்க என்ற ஒரு இழை ஆரம்பித்து தவறாமல் மற்றவர்களில் பிறந்த நாள் மற்றும் திருமணநாளை போட்டு எல்லோரையும் மணமார வாழ்த்தி கொண்டு இருக்கிறார்.
வேலன் சாருக்கு க்கு மிக்க நன்றி + சந்தோஷம்.

வாங்க ஹனீஃபின் பேவரிட் ப்ரெட் பஜ்ஜியை சுவைக்கலாம் வாருங்கள்






காலை உணவுக்கு தினம் ஒரு வகை, பாம்பே டோஸ்ட், பர்கர் சாண்ட்விச், ஹாட் டாக்,பூரி பாஜி, நூடுல்ஸ், சுண்டல் , என இப்ப ஆறுமாதமா 10 நாளைக்கு ஒரு முறை பிரட் பஜ்ஜியும் என் பையனுக்கு ரொம்ப பிடித்து விட்டது.
கொண்டு போனாலே ஸ்கூலில் ஒரு கூட்டம் சேர்ந்துடுதாம். இப்ப கொஞ்சம் கூடுதலாகவே வைத்து அனுப்புவது.

தேவையானவை

பிரெட் சிலைஸ் - 6 
கடலை மாவு - ஒரு டம்ளர்
அரிசிமாவு - கால் டம்ளர்
கார்ன் பிளார் மாவு - சிறிது
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
ரெட் கலர் தேவை பட்டால்
உப்பு தேவைக்கு
பெருங்காயம்  கால் தேக்கரண்டி(அ) இஞ்சி பூண்டு பேஸ்ட் அரை தேக்கரண்டி
எண்ணை சுட தேவையான அளவு

செய்முறை

ப்ரெட்டை குறுக்கால ஓவ்வொன்றையும் முன்று பாகமாக வெட்டி கொள்ளவும்.இல்லை வேண்டிய வடிவில் வெட்டி கொள்ளவும்.
மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் தயிர் பதத்துக்கு கலந்து கொள்ளவும்.
எண்ணையை காய்வைத்து ஒவ்வொன்றாக போட்டு எடுக்க்கவும்

குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்..





Saturday, February 12, 2011

தங்க நகை அணியும் போது





தங்க நகைகளை அணியும் போது ஓரிடத்தில் அமர்ந்து அணியவும்.கம்மல், மூக்குத்தி போன்றவை அணியும் போது பேசி கொண்டே அவசரமாக அணிய வேண்டாம்.அப்படி அணிபவர்கள் அது பத்து முறை தொலைந்து போய் விழுந்து விழுந்து பதற்றத்துடன் தேட வேண்டி வரும்.


விஷேஷங்களுக்கு செல்லும் போது நகைகளை பெட்டியோடு கொண்டு செல்ல வேண்டாம் அந்த காலத்து பாட்டிகளின் சுருக்கு பை (அ) துணி பர்ஸ்களில் வைத்து கொண்டு செல்லவும்.இதனால் நகை பெட்டி நகைபெட்டி என்று அந்த பெரிய பேக் களை பாதுகாக்க தேவையில்லை, கைக்கு அடக்கமா ஹேண்ட் பேக்கிலேயே வைத்து கொள்ளலாம்.

வெளியூருக்கு சென்று அணியும் நகைகளை, அதாவது கல்யாண சத்திரத்தில் போய் தங்கி அங்கு அணிய வேண்டி வந்தால். பெரிய பார்சலாக தூக்கி கொண்டு போகாமல் சின்ன இரண்டு முன்று பர்ஸ்கள் வைத்து கொள்ளவும்.அதில் கம்மல், மோதிரம், மாட்டல் ஒரு பர்ஸிலும், வளையல் ஒரு பர்ஸிலும், பெரிய ஹார்கள், மாலைகள் ஒரு பர்ஸிலும் வைத்து கொண்டால் எடுப்பது சுலபம் இலலை என்றால் ஒரு சிறிய, கம்மலோ (அ) மோதிரமோ காணமல் போக வாய்ப்பிருக்கு. கவரிங் நகைகள் செண்ட் போன்றவை தனித்தனியாக வைக்கவும்.





முக்கியமாக பிரேஸ்லேட் அணிவர்கள் கல்யாணவீடுகளில் தவறவிடுவதை நேரில் பார்த்தும் இருக்கிறேன், அதை கண்டு பிடித்து கொடுத்தும் இருக்கிறேன்.
ஆகையால் பிரேஸ்லேட் அணியும் போது சின்ன கோல்ட் கலர் சேஃப்டி பின்னை கொக்கி வளையத்தில் மாட்டி கொண்டால் டென்ஷன் இல்லாமல் இருக்காலாம்.

கல்யாண பெண்களுக்கு  கழுத்தில் நிறைய செயின் போடுபவர்கள் கூடவே மெல்லிய செயினும் போட்டு இருப்பார்கள்.
அதுவும் தொலைந்து போக சான்ஸ் இருக்கு அதற்கும் சேஃப்டி பின் தான் எல்லா செயின் வளையங்களிலும் சேர்த்தாற் போல் சின்ன கோல்ட் சேஃப்டி பின்னை குத்தி கொள்ள‌வும்.


கல்யாண பெண்களுக்கு, சின்ன குழந்தைகளுக்கு நெற்றி சுட்டி வைக்கும்போது அது தலையில் ஒரு இடத்தில் நிற்காது அதற்கும்சேஃப்டி பி ன் தான் நேர் வ்கிடு ஆரம்பிக்கும் இடத்தில் முடியோடு சேர்த்து ரிங்கில் குத்தி விடுங்கள் அது நீங்க சொன்ன பேச்சை கேட்கும்.


இப்ப தஙக் விற்கிற விலையில் யாரு கழுத்து நிறைய செயின போடுறதுன்னு கேட்கீறீங்களா? என்னதான் விலை ஏறினாலும் வாங்குகிறவர்கள் வாங்கி கொண்டு தான் இருக்கிறார்கள்,\



Monday, February 7, 2011

ஹையா லேடீஸ் ஸ்பெஷல் மாத இதழில் நானும்


முட்டை கோஸ்,கீமா முர்தபா




தேனக்கா மெயில் செய்து ஜலீலா உங்கள் ஆக்கங்கள் கதை கட்டுரை அப்படி அனுப்புங்க என்றதும் என்ன எழுது வது கதை தெரியும் இருந்தாலும் சரியான எழுத்து நடை வராது. கவிதை சுத்தம்,, சமையல தவிர என்ன எழுதலாம் என்று யோசித்த போது தான் கான்சர் , எங்க வீட்டில் ஒருவருக்கு இந்த கொடிய நோய் வந்ததில் இருந்து கடந்த ஐந்து வருடங்களாக என் காதில்  மாதம் இரண்டு பேருக்காவது கேன்சர் இருப்பது தெரியவந்தது, இன்னும் உலகத்தில் பல பேரை ஆட்டி படைத்து கொண்டு இருக்கு இந்த நோய்
.
நெட்டும் சரியா வொர்க் ஆகல, ஏன்னு நேற்று ஸாதிகா அக்கா மெசேஜில் சொன்னாங்க.உடனே பார்க்கவும் முடியல, உடம்புக்கும் முடியல ஹாஸ்பிடல் சென்றுவிட்டேன், இப்ப தான் பார்த்தேன்

.


கேன்சர் உள்ளவர்களை நேரில் பார்த்து அவர்கள் சாப்பிட முடியாம கொடுரமான முறையில் தவிப்பதையும் நேரில் கண்டும், சில பேர் சொல்லியும் கேட்டதில் நாமா எந்த கை வைத்தியமும் பார்த்து கொள்ள முடியாது, மெயினான சரியான உணவு முறை. வலியில்லாத கட்டி, தாஙக் முடியாத வயிற்று வலி, ஆறாத புண் இருந்தால் கண்டிப்பாக உடனே மருத்துவரிடம் சென்று தரோவாக செக் பண்ணி சரிசெய்து கொள்வது நல்லது.

இப்ப கூட தெரிந்த தோழியின் மாமானாருக்கு குடலில் கேன்சர்,ஆப்ரேஷன் நல்ல படியாக ம்டுஇந்துதுள்ளது அவர் உடல் நலம் தேறி வரனும்.எல்லோருக்கும் உடம்பில் கேன்சர் செல்கள் இருக்கின்றன, அது சில பேரை தாக்கு கிறது, எனக்கு தெரிந்ததை எழுதி அனுப்பினேன்.
எல்லோரும் வருடமொரு முறையாவது ஒரு ஜெனரல் செக் அப் எடுத்து கொள்வது நல்லது
 இந்த மாதம் பிப்ரவரி லேடிஸ் ஸ்பெஷல்  இதழில் வெளி வந்துள்ளது,என்னை தேர்ந்தெடுத்த கிரிஜா மேடத்துக்கும், தேனக்காவுக்கும் என் நன்றிகள் .

இன்று கல்யாண நாள் அதுவுமா மாத இதழில் என் பதிவு ,இந்த மாதம் வலை தோழிமஹா விஜெய் அவார்டு, இரண்டும் மகிழ்சி.




மஹா விஜெய் கொடுத்த அன்பான அவார்டை .

இந்த அவார்டை கொடுத்த .

அஸ்மா
புதுகை தென்றல்
மனோ அக்காவின்முத்து குவியல்
லக்ஷ்மி அக்கா
கீதா 6


இவர்களுக்கு வழங்குகிறேன்

.எனக்கு விருது கொடுத்து மகிழ்வித்த மஹா விஜெய்க்கு மிக்க நன்றி+சந்தோஷம்
என் பதிவை லேடிஸ் ஸ்பெஷல் மாத இதழில் வெளிவர காரணமாக இருந்த தேனக்காவிற்கு மிக்க நன்றி
எனக்கும் பதிவு சரியா போட முடியல சில லின்குகள் தான் எடுக்க முடிந்தது.